Friday, 28 November 2014

' உ ' வழக்கத்தின் விளக்கம்

                                                                                           

இதுவே என் முதல் பதிப்பு. "உ" போட்டு ஆரம்பிக்க வேண்டும் என்பார்கள். நான்  "உ" வை பற்றி விவரிப்பதன் முலம் என்னுடைய பதிவுகளை ஆரம்பிக்க விரும்பினேன்.

சரி!... 

பல விதமான விளக்கங்கள் இருக்கின்றன். நான் படித்ததில் ஆன்மிக அன்பர்களுக்கு தேவயான விளக்கங்கள் மட்டும் இங்கு பகிருந்துருக்கிறேன்.
* உ - என்பது பிள்ளையார் சுழி
* உ - உயிர் எழுத்துக்களில் 5 ம் எழுத்து.
* உ - தமிழ் எண்களில் அதன் மதிப்பு - 2

படித்தாகிவிட்டது.. இனி எதனால் "உ" எழுத்துக்கு மட்டும் இவ்வளவு சிறப்பு என்று நீங்கள் கேட்பது எனக்கு புரிகிறது. இதோ மேலும் ஆராய்வோம்...

இறைவன் எப்படி இருப்பார்...?

ஆன்மிகவாதகளிடம் கேட்டால் "அருவுருவம்" என்பார்கள். அதென்ன "அருவுருவம்",

அருவுருவம் - அருவம் + உருவம் - அதாவது நிலையில்லாத வடிவம் என்று எடுத்துக்கொள்ளலாம்.

இதை எதற்காக சொல்கிறிர் என்று கேட்பது புரிகறது, இதோ,

ஓம் - ப்ர்ணவ மந்திரம் தான் அந்த 'அருவுருவம்' அர்த்தம்.

ஓம் - அ(அகாரம்) + உ(உகாரம்) + ம்(மகாரம்) என்று பிரிக்கப்படுகிறது.

இதன் முலம் "அ  உ ம்"  முக்கியமான வார்த்தைகளாகும் என்பதை நாம் தெரிந்து கொண்டொம். 

சரி எதனால் "உ" போடும் பழக்கம் வந்ததது,

இதற்கு குண்டலினி யோகம் பற்றி சிறிய தெளிவு இருந்தால் போதுமானது. ஆமாம்.  குண்டலினி யோகத்தில் ஆரம்பிக்கும் இடம் எது என்று தெரிந்தால் போதுமானது. அதுதான் "மூலாதாரம்". "மூலாதாரம்" உயிர்சக்தி சுருண்டு இருக்கும் இடம். இதனை யோகத்தினால் எழுப்ப வேண்டும்.
 "உகாரம்" என்பதின் பொருள் -  உயிர்சக்தி என கூறுவார்கள்.

அதாவது, யோகத்தில் ஆரம்பிக்கும்போது "உ" வில் இருந்தே ஆரம்பிக்க வேண்டும் என்பதே கருத்தாகும். இதனை உணர்த்தவே "உ" போடும் வழக்கம் வந்தது. "மூலாதாரம்" அதிபதி பிள்ளையார் ஆவார், "பிள்ளையார் சுழி" என்று கூறுவதற்கு காரணமும் அதுவே ஆகும்.
நாம் சற்று சிந்தித்து பார்த்தால்  நம் ஆன்மிக முன்னோர்கள் எவ்வளவு தெளிவாக நமக்கு புரிய வைக்க முயன்று இருப்பார்கள். இன்னும் குரு அருள் பெற்றவர்களுக்கு இந்த பதிவு மிக தெளிவாக புரியும். 

இந்த பதிவில் ஏதேனும் மாற்று கருத்து இருந்தால் அதனைப் தயவு கூர்ந்து பகிரவும். 

இந்த பதிவின் முலம் ஒர் அளவுக்கு "உ" போடும் வழக்கம் புரிந்தால் அது என் குரு வின் ஆசியே ஆகும்.
நன்றி, 

சி.


No comments:

Post a Comment