நாம் தினசரி கோவில்களுக்கு செல்கின்றோம்,கோவில் கருவறை இருக்கும் இறைவனை வேண்டுகிறோம், வணங்குகிறோம், வருகிறோம். அது மட்டும் இல்லாது அந்த சிறிது நேரத்தில் அங்கு கிடைக்கும் நிம்மதி வேறு எங்கும் கிடைக்காது என்பதை உணரவும் செய்கின்றோம்.
கோவில்களுக்கு வரும் பொழுது நம் மனமும்,உடலும் சுத்தமாக இருக்க வேண்டும் என்பதை இந்துக்கள் கடை பிடித்து வருகின்றனர். பொதுவாக இந்துக்கள் எந்த கோவிலாக இருந்தாலும் சரி சிறியதோ,பெரியதோ வரும்பொழுது மனதையும்,உடலையும் சுத்தமாக் இருக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டும் மாறுவதில்லை.
அப்படிப்பட்ட் கோவில்களையும் சில நாத்திர்களும்,பகுத்தறிவாளர்களும் சில கோவில் கோபுரங்களில் சிற்றின்ப கலைகள் செதுக்கப்பட்டு இருக்கிறது என்றும், அங்கே போய் வணங்குகிறிர்களே என்று நம்மை கேலியாக கேட்பதுவும் உண்டு. நாமும் அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை, அந்த கோபுரங்களுக்கு வேறு அர்த்தம் உண்டு அது ஞானிகளுக்கும் தெரியும் என்று பதில் தெரியாமல் மழுப்பதுவும் உண்டு. இதற்கு ஒரு விளக்கம் வேண்டும், நாத்திர்களும், பகுத்தறிவாளர்களும் தக்க விளக்கம் கூற வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இந்த பதிவு உதவியாக இருக்கும் என நம்புகிறேன்.
சிற்றின்ப கலைகள் கோவில் கோபுரங்களில் இருப்பது உண்மையா?.. ஆமாம் உண்மை.. கஜுராஹோ விலேர்ந்து கும்பகோணம் வரை பல கோவில் கோபுரங்களில் இருப்பது உண்மை. மனமும்,உடலும் சுத்தமாக இருக்க வேண்டும் என்று கடைபிடிக்க வைத்த முன்னோர்கள் ஏன் இதனை செதுக்கினார்கள் என்ற கேள்வியும் நம் மனதில் எழுவது சரியே. அந்த கேள்விகளுக்கான் என்னுடைய பதில் இனி....
குண்டலினி சக்தி எழுப்ப சித்தர்கள் சொன்ன வழி தியானம். தியானம் செய்வதால் குண்டலினி எழும்பும் இடம் (அல்லது) ஆரம்பிக்கும் இடம் மூலாதாரம். மூலாதாரத்தில் உள்ளே சுருண்டு இருக்கும் உயிர் சக்தியை எழுப்ப தேவயான வெப்பம் உருவாக்குவதற்கே நாம் தியானம்,தவம் செய்கின்றோம்.அந்த வெப்பம் உருவாவது உண்மைதானா? எங்கேர்ந்து வருகின்றது? போன்ற கேள்விகளுக்கு ஒரு சிறிய உதாரணத்துடன் என் பதில், நாம் சில சமயங்களில் சில வேலைகளை முழு ஈடுபாட்டுடன் செய்யும் போது ஒரு வெப்பம் உருவாகும் அது .உயிர் சக்தியை எழுப்பும் அதனால் தான் "செய்யும் தொழிலே தெய்வம்" என்ற பழமொழி உள்ளது. ஆனால் அந்த முறை மிகுந்த கால தாமதமாகும் என்பது என் கருத்து. சரி.அது போல தாம்பத்தியம், இதில் வரும் வெப்பமானது ஒர் உயிரை உருவாக்குவதற்காக உதவுகிறது. இந்த கருத்துக்களை உணர்த்தவே கோவில் கோபுரங்கள் வெளியில் கடவுளால் உருவாக்கப்படும் வெப்பத்தை நாம் எவ்வாறேல்லாம் பயன்படுத்துகிறோம் என்றும் அதை உருவாக்கும் "இறைவன்" கோவிலுக்கு உள்ளே இருக்கிறார் என்றும் எளிதாக சொல்லப்பட்டுள்ளது. அதனால்தான் கோவில் வெளிப்புறம் மட்டுமே இத்தகைய சிற்றின்ப சிற்பங்களும், வேலைபாடுகளும் உள்ளன.
ஆதலால் கோபுரங்கள் உள்ள அத்தகைய வேலைபாடுகளை பார்க்கும்போது....
" இறைவனை தரிசிக்க எந்நேரமும் சதா சிவ சிந்தனையுடன் தியானம், தவம் செய்து அந்த வெப்பத்தினை பயன்படுத்தி நாம் நம்முள்ளே கடந்து செல்லவேண்டும்' என்ற எண்ணம் வரவேண்டும் என்பதற்காகவே" என்பதனை நாம் நினைவுகூர வேண்டும். தியானம்,தவம் முதலியவற்றால் வரும் வெப்பமானது மூலாதாரத்தில் இருக்கும் உயிர் சக்தியை எளிதாக எழுப்பக்கூடிய ஆற்றல் மிக்கது என்பதனை புரிந்துகொள்ளுதல் வேண்டும்.
இத்துடன், "Sanskrit Magazine" என்னும் இணையதளத்தில் "கஜுராஹோ" கோவில் பற்றி " Indologist Mr.Udayan Indurkar" அந்த சிற்பங்கள், வேலைபாடுகள் "Cosmic Explosion" என்னும் கருத்துடன் ஒப்பிட்டு சொல்வதை அந்த இணையதள்த்தில் படித்துத் தெரிந்து கொள்ளவும்.
இந்த பதிவில் ஏதேனும் மாற்று கருத்து இருந்தால் அதனை தயவு கூர்ந்து பகிரவும்.
நன்றி,
சி
No comments:
Post a Comment