Friday, 30 December 2016

ஆறு தரிசனங்கள் - 04

ஆறு தரிசனங்களின் தத்துவ வாதங்கள்
=====================================

இந்திய ஞான மரபில் வரும் தரிசனங்களின் எண்ணக்கருவினைகள், கொள்கைகள்,கோட்பாடுகள் தத்துவ வாதமாக எழுந்தன. அவைகளை பற்றிய ஒரு சிறு முன்னுரையே இந்த பகுதியாகும்.
1. கருத்துவாதம்
-----------------------------
நாம் காணும் புற உலகம் அனைத்தும் நம் எண்ணங்களால் உருவான கருத்தே ஆகும். புற உலகம், பொருள் இவை அனைத்தும் பொறிகள் வாயிலாக அறிவதும், அதனை ஆராய்வதும் என அனைத்தும் நம் எண்ணங்களே. நம் ஆத்மாவின் நேரான தொடர்பு இல்லாமல் போவதினால் புற உலகம் உண்மையில் இருக்கிறது என்பதும், அப்படியே இருந்தாலும் அது நாம் கருதுவது போல்தால் உள்ளது என்பது சாதிக்க முடியாததாகின்றன. இதை மிக விரிவாக ஆராய்ந்ததின் பேரில் கருத்து மட்டுமே உண்மை என்ற நிறுவியதே "கருத்து வாதம்" ஆகும்.
2. மெய்மைவாதம் (அ) யதார்த்த வாதம்
---------------------------------------------------------------
"கருத்து வாதம்" என்னும் கோட்பாட்டை தர்க்க ரீதியாக மறுத்து உலகம்,நிகழ்வு,பொருள் இவை அனைத்தும் கருத்தல்ல அவை புறத்தே மெய்யாகவே உள்ளன என கொள்வதே "மெய்மைவாதம்" ஆகும்.
3. ஒருமைவாதம்
-----------------------------
கருத்து வாதத்தின் விளைவு "ஒருமைவாதம்" என சொல்லலாம். இவ்வுலகம் அனைத்தும் நம் எண்ணம் என முடிவுக்கு வரும்போது சகல உலகமும் தோற்றத்தின் காரணம் நம் ஆத்மா என்ற ஒரேயோரு மூலப்பொருளில் அடங்கும். அந்த ஒன்றே தோற்றதிற்கான காரணம் என முடிவதே "ஒருமை வாதம்" ஆகும்.
4. பன்மைவாதம்
----------------------------
மெய்மை வாதத்தின் விளைவு "பன்மை வாதம்" என சொல்லலாம். ஏன் எனில் புற உலகம், பொருள், நம் ஆன்மா இவை அனைத்தும் உண்மையே என்ற நிலைக்கு வருவதினால் இவை தோற்றத்திற்கான காரணம் பல பொருள் என அடங்கும். அதுவே "பன்மை வாதம்" ஆகும்.
5. அநாத்மவாதம் - நைராத்மியவாதம்
------------------------------------------------------------
மாற்றம் ஒன்றுதான் உண்மை. அதுவே தொடர்ச்சியாக,இடையிறாது நடந்துகொண்டிருக்கிறது. இங்கு மாற்றம் என்பது அழிதல்,நீங்குதல், தோன்றுதல் என பொருள் கொள்ளவேண்டும். மாற்றம் நிகழ்ந்தது எனில் "முன் இருந்தது அழிந்து வேறோன்று தோன்றியது" என்றாகும். இப்படி குண இயல்புகளுடன் கூடிய ஒரு தொகுப்பையே நாம் உயிர், உடல் என குறிப்பதாகும். இங்கு நிலையான ஆத்மா என்ற ஒன்று இல்லை ஆதலால் நிலைபேறு என்பது பொய், மாற்றம் மட்டுமே உண்மை என்பதே முடிவாகும். இந்த கொள்கையே "அநாத்மவாதம் அ நைராத்மியவாதம்" ஆகும்.
6. ஆத்மவாதம்
--------------------------
அநாத்மவாத கொள்கையின் நேர் எதிரான கொள்கையே ஆத்மவாதம். அதாவது உண்மைபோல் காணப்படும் இந்த மாற்றங்களுக்கு அடியில் இம்மாற்றங்களால் பாதிக்கப்படாத நீலையான பொருள் உண்டு. அதுவே ஆத்மா ஆகும். அது மாறுவதாக காணப்படுவதே "மாயை" என்பதாகும். இந்த கொள்கையே "ஆத்மவாதம்" ஆகும்.
7. காரண காரிய வாதம்
---------------------------------------
ஒவ்வொரு காரியத்துக்கும் ஒரு காரணம் இருந்தாக வேண்டும்."எள்" காரணம் "எண்ணெய்" காரியம், "மண்" காரணம் "பானை" காரியம். ஒரு பொருள் எங்கிருந்து வந்தது என கேள்விக்கான விடை ஒரு தத்துவ விளக்கமாக உருவாகும். அதுவே காரண காரிய வாதம் ஆகும்.
8. சத்காரிய வாதம்
-------------------------------
எந்த ஒரு காரண நிலையிலும் காரியம் உண்டு என எடுத்துரைப்பது சத்காரிய வாதம் ஆகும். அதாவது காரியம் புதிதாக தோன்றுவது அல்ல அது காரண நிலையில் உறைந்துள்ளது என்பதை எடுத்துரைப்பதே "சத்காரியவாதம்" ஆகும். பானை என்பது ஏற்கனவே மண்ணிலுள் உள்ளது, இல்லை எனில் மண்ணிலிருந்து பானையை உருவாக்க முடியாது என்பதே "சத்காரியவாதம்" ஆகும்.
9. அசத்காரியவாதம்
----------------------------------
காரணத்தில் காரியம் உறைவதில்லை என்பதும், காரியம் புதிதாக தோன்றுவது என சத்காரியவாதத்திற்க்கு மறுத்து எடுத்துரைப்பது அசத்காரியவாதம் ஆகும். மண்ணில் பானை உறைந்துள்ளது எனில் நேராக மண்ணை வைத்து உலை வைத்துவிடலாமே. உருவம் என்பது காரணத்தில் இல்லை எனில் காரியம் புதிதாக தோன்றியது என ஏற்றாக வேண்டும் என்பர் அசத்காரியவாதிகள்.
10. பிரமபரிணாமவாதம்
--------------------------------------
பிரம்மம் உண்மை. பிரம்மம் உண்மையாகவே மாறி உலக சிருஷ்டி நிகழ்கின்றது. அதாவது காரணமும் உண்மை, அதிலிருந்து வந்த காரியமும் உண்மை. ஆதலால் பிரம்மம் உண்மை, அதிலிருந்து தோன்றிய உலகமும் உண்மை. இக்கொள்கை கொண்டதே "பிரம பரிணாம வாதம்" ஆகும்.
11. சூன்யவாதம்
--------------------------
பிரமபரிணாம வாதத்திற்க்கு நேர்மாறான கொள்கையே "சூன்யவாதம்" ஆகும். காரணமும் உண்மை அல்ல, காரியமும் உண்மை அல்ல, பிரம்மம் உண்மை அல்ல. உலகம் உண்மை அல்ல. அதாவது, உள்ளது என ஒன்றுமே இல்லை என கருத்தை முன் நிறுத்தி வழங்குவதே "சூன்ய வாதம்" ஆகும்.
12. விவர்தவாதம்
----------------------------
ஒரேயொரு பொருள்தான் உண்மை அது பிரம்மம். உலகம் சடப்பொருள். பிரம்மம் சித்து பொருள் அதாவது அறிவே சொருபமான பொருள். அதிலிருந்து ஒரு சடப்பொருளான உலகம் உருவாவது அறிவுக்கு நேர்மாறானது. அதனால், சிருஷ்டியால் இவ்வுலகம் பிரம்மத்திலிருந்து உருவாவது போன்று காணப்படுகிறதே ஒழியே உண்மையில் பிரம்மத்தில் மாற்றம் ஏதுவும் ஏற்படுவதில்லை. அதாவது, ஒரு பொருள் இன்னொன்றாக மாறாமலிருந்தபடியே மாறிவிட்டதாக காணப்படுவதே "விவர்தவாதம்" ஆகும்.
இத்துடன் இந்திய தத்துவ பிரிவுகளில் அதிகமாக கையாளப்படும் தத்துவ வாதங்களே மேலே குறிப்பிடப்பட்டுள்ளன். மேலும் ஒவ்வொரு தத்துவ பிரிவுகளில் உட்பிரிவுகளை பார்க்கும்போது மேலும் சில தத்துவ வாதங்களை காணமுடியும். அவைகளை அந்தந்த தத்துவ பிரிவுகளை விரிவாக காணும்போது விளக்கினால் பொருந்தும் என கருதி இங்கே விளக்கப்படவில்லை.

ஆறு தரிசனங்கள் - 03

பிரமாணங்கள்
=============

தரிசனங்களை பற்றி விளங்கிகொள்ள மூப்பொருள்களான உலகம், ஆன்மா, இறைவன் ஆகியவற்றின் அடிப்படை கருத்துக்களை கொண்டே புரிந்துகொள்ள முடியும். அந்த அடிப்படை கருத்துக்கள் எப்படி அணுகுகிறது, அது கையாளும் பிரமாணங்கள் எவை என தெரிந்துகொள்வது அவசியமாகிறது.
பிரமாணம்:
அறிபடும் பொருளை அறிந்துகொள்ள அறிபவனுக்கு வேண்டிய அறிவை தரும் வழிகள் பிரமாணங்கள் ஆகும்.
இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பிரமாணம் மொத்தம் ஆறு ஆகும். அவை,
1. பிரத்தியட்சம் - கண்முன் சிற்கும் முதல்கட்ட காட்சி அது மேலும் இரு இயல்புகள் கொண்டது.
2. அநுமானம் - காட்சியாக இன்ன பொருள் என தெரியவில்லை என்றாலும் இதற்க்கு முன் பிரத்தியட்சத்தினால் உருவான அறிவை கொண்டு ஊகிப்பது. அநுமானத்தை மூன்று வகையாக பிரிக்கலாம். அதனுள் செல்லாமல் உதாரணமாக ஒன்றை காண்போம்.
(உ) - குளிர் காற்று அடித்தால் மழை பெய்வது பிரத்தியட்சமாக அறிந்துகொள்கிறோம். அதனை வைத்து அடுத்த முறை குளிர் காற்று அடித்தால் மழை வரும் என அநுமானிக்குறோம்.
3. ஆப்தவாக்கியம் - முன்னறிவு, மூதாதையர் ஞானத்தை நம்பி ஏற்பது. சுருதி என்றும் கூறுவர்.
4. உபமானம் - ஒருவர் கூறும் பொருளை ஏற்கனவே உள்ள பொருளின் உவமை கொண்டு ஒப்பிட்டு, அதன் வேற்றுமைகளையும் தெரிந்த அப்பொருளை பற்றி அறிவது.
5. அருத்தாபத்தி - மேற்கூறிய (4) பிரமாணங்களிலிருந்து கிடைக்காமல் கிடைக்கும் அறிவு அருத்தாபத்தி எனப்படும்.(உ) - பகலில் உண்ணாத ஒருவன் பருத்து இருக்கிறான் எனில் அவன் இரவில் உண்கிறான் என (இரவு உண்பதை நேரில் காணாமேலேயே, யாரும் உரைக்காமல்) பொருள் கொள்வோம். ஆதலால் (1,3) பிரமாண ஆகாததால் (4) ம் பிரமாணம் ஆகாது. அதெப்படி (2) பிரமாணம் ஆகாது எனில் அநுமானம் என்பது வெறும் ஊகம் மட்டுமில்லாமல் வியாப்தி என்ற அம்சம் கொண்டது. அதாவது புகை உருவாகும் இடத்தில் சர்வநிச்சயமாக நெருப்பு உண்டு என்பதுதான். ஆனால் மேற்கூறிய உதாரணத்தின் படி பார்த்தால் இரவு உண்பவர் அனைவரும் பருப்பதில்லை, பகல் உண்பவர்களும் பருப்பதுண்டு. இப்படிப்பட்ட ஒரு அறிவே இங்கு பிரமாணம் ஆகிறது.
6. அனுபலப்தி - ஒரு பொருள் இல்லை என்பதை எவ்வாறு அறிகிறோம் என்பதே. இருப்பதை அறியவே மேற்கூறிய 5 பிரமாணங்களும் உதவுகிறது. இல்லாததை இல்லை என புலன்கள் உதவியில்லாமல் சொல்வது எவ்வாறு. அதனால் இன்மை என்ற அறிவு நமக்குள் உருவாவதினால். இதனையும் ஒரு பிரமாணமாக கொள்வதுண்டு.
மேற்கூறிய 6 பிரமாணங்களை வைத்தே ஆறு தரிசனங்களை சேர்ந்தோர் முப்பொருள்களுக்கான அடிப்படையை உருவாக்கினர். இப்பிரமாணங்கள் வைத்து ஆறு தரிசனங்களையும் மேலும் பிரிக்கலாம்.

ஆறு தரிசனங்கள் - 02

ஆறு தரிசனங்கள்:[Shad Darshanas]
===============================
உண்மை பொருளை ஆறு கோணங்களில் அவதானித்து பெற்ற ஆறு தோற்றங்களே ஆறு தரிசனங்கள். ஒவ்வொரு தரிசனமும் ஒவ்வொரு சூத்திரத்தை அடிப்படையாக கொண்டது. அவை முற்காலத்தில் ஆதிகுருக்களின் சுய அனுபவத்தினாலும், தியானத்தினாலும் சூத்திரமாக இயற்றப்பட்டது. அதன் பின் பல உரையாசிரியர்கள் தோன்றி தரிசனத்த்தின் சூத்திரங்களை விரித்தும், விவரித்தும் உரைத்தனர். இதன் அடிப்படையில் ஒவ்வொரு தரிசனத்திற்க்கும் இன்றைய தேதியில் சூத்திரமாக நமக்கு உதவும்படி வழங்கியவர் யாவர் என பார்ப்போம்.
1. நியாயம் - கெளதமரிஷி
2.வைசேடிகம் - கணாதரிஷி
3.சாங்கியம் - கபிலமுனிவர்
4.யோகம் - பதஞ்சலிமுனிவர்
5.பூர்வமீமாம்சை - சைமினி
6.உத்தரமீமாம்சை - வியாசர்

ஆறு தரிசனங்கள் - 01

இந்து ஞான மரபு அடிப்படை சட்டகம் [Framework for Hinduism]

இந்து என்கிற பெயர் ஒர் வழிப்பாட்டை, கலாச்சாரத்தை, தத்துவஞான மரபை, வாழ்கை முறையை உள்ளடக்கிய ஒரு பண்பாட்டை குறிக்க பெறுவது. மதம் என்கிற நோக்கில் பார்க்கும்போது அதற்கான கருத்து சட்டகமும், பாடத்திட்டமும் ஒரு ஞான மரபாக பின்பற்றியே வரப்பட்டுள்ளது. அவை,
1. நான்கு வேதங்கள், ஆகமங்கள் மற்றும் உபநிடதங்கள் 
[The Four Vedas, Agamas and Upanishads]
2. ஆறு தரிசனங்கள். அவைகளில், வேதாந்த தரிசனத்தின் உட்பிரிவான
அத்வைதம், த்வைதம், விசிஷ்டாத்வைதம், சைவ சித்தாந்தங்களும் அடங்கும்
[ The Six Dharsanas. And in it the Vedantha Dharsana advaita, dvaita and visishtadvaita ]
3. ஆறு சமயங்கள் அதன் ஆதார நூல்கள் மற்றும்
இலக்கியங்கள்.
[The Six Sects and their works on philosophy and bhakthi ]
இந்த வரையரை தொன்று தொட்டு வழங்கப்பட்டு வந்ததாகும். பன்முக நோக்குடைய இந்து மதம் இவை அனைத்தும் ஒருங்கினைக்கப்பட்ட ஒரு மதம் ஆகும். இதில் ஆறு தரிசனங்கள் பற்றிய தொகுப்பு "ஆறு தரிசனங்கள்" என்ற தலைப்பில் விளக்கப்படும். இதற்க்கு reference நூல்களாக இந்திய தத்துவ ஞானம், இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள், தமிழ்ன்ஹிந்து இணையதளம் மற்றும் பல தரப்பட்ட பத்திரிக்கையில் வந்த விளக்கங்களின் ஒரு தொகுப்பாக இருக்கும்.

Tuesday, 25 October 2016

சந்தேகத்தை தெளிதல் - உபநிடதம்

"சந்தேகத்தை தெளிதல்" என்னும் தலைப்பின்கீழ் அனைத்து (கீதை,உபநிடதம்,வேதம்) புரட்டுகளையும், திரிபுகளையும் கொண்டு வர நினைத்திருந்தேன். ஆனால் ஒவ்வொரு முறையும் பிற மதத்தவர்கள் வெவ்வேறு புதிய கீதை வசனங்கள், உபநிடத மற்றும் வேத வசனங்களை திருத்த ஆரம்பித்துவிட்டனர். ஒரு காலத்தில் கீதை வாக்கியங்களை திருத்திய இவர்கள் தற்போது வேத, உபநிடத வாக்கியங்களை திரிபு ஏற்படுத்த முயற்சி செய்கின்றனர். இதனாலேயே கீதை வசனங்கள் மட்டும்- "சந்தேகத்தை தெளிதல் - பகவத்கீதை" என்ற தலைப்பின் கீழ் கொண்டுவருவது என தீர்மானித்தேன். "சந்தேகத்தை தெளிதல் - உபநிடதம்" -  உபநிடத விளக்கங்கள் கொண்டு இருக்கும், "சந்தேகத்தை தெளிதல் - வேதம்" - வேத விளக்கங்கள் கொண்டிருக்கும். ஒவ்வொரு தலைப்பின் லிங்க் ஒவ்வொரு பக்கத்தின் இறுதியில் கொடுக்கப்பட்டிருக்கும். அதேபோல் நான் கேள்விபடும் புது திரிபு வசனங்களை விளக்கத்துடன் அவ்வப்போது அப்டேட் செய்யப்படும். நீங்கள் ஏதேனும் திரிபு வசனங்களை கண்டால் அதனை முழுதாக கமெண்ட் பகுதியில் இடுமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி, இனி..
.
உபநிடதம் என்றால் என்ன என்பதற்க்கு உபநிடதம் பற்றி திரு.ஜெயமோகன் அவர்களின் பார்வை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

"உபநிடதம் - நேர் பொருள் "அருகே அமர்தல்" -  அதாவது குருவின் அருகே இருந்து ஞானத்தை தெரிந்துக்கொள்ளுதல். இந்த நூல்கள் இரண்டு வகையாக உபதேசிக்கப்ப்ட்டிருக்கும். ஒன்று, உபநிடதம் ஒரு நாடகீயமான தருணத்தில் வெளிப்படுத்தப்பட்ட உபதேசமாக இருக்கும். அந்த நாடகீயத் தருணத்தின் புனைவுத்தன்மை அந்த உபதேசத்திலும் தொடரும். இரண்டு, அது ஒரு சீடனுக்கு குருவால் உபதேசிக்கப்பட்ட வடிவில் இருக்கும்."

"பகவத் கீதை" -  ஒரு இதிகாச நூலில் வரும் பாகமாக இருப்பினும் அது உபதேசமாக இருப்பதினால், குர் சிஷ்ய உறவு உண்டாவதினால் அதனை ஒரு உபநிடதமாகவே கருத வேண்டும். கீதை உபநிடதம் என்பது பல வேத, உபநிடத கருத்துக்களை உடைய சாறாக கருதப்படுவதின் காரணமும் அதுவே. இனி உபநிடத கருத்து திரிபுகளை பார்ப்போம்.

உபநிடத விளக்கங்கள் :

உபநிடதங்கள் பொறுத்தவரை மத மாற்ற பேர்வழிகள் அதிகமாக கையாள்வது 2 உபநிடதங்கள் அவை, சாந்தோக்கிய மற்றும் ஸ்வேதாச்வதர மும் ஆகும். இவர்கள் ஏன் இதனை மட்டும் கையாள்கின்றனர் என்ற கேள்வி ஒரு புறம் இருக்கட்டும். 200 மேற்பட்ட உபநிடதங்களில் 108 உபநிடதங்கள் முக்கியமானதாக கருதப்படுகிறது. அந்த 108 உபநிடதம் ஒவ்வொரு விளக்கங்கள் கொண்டவை. இவர்கள் அதில் ஒரு குறிப்பிட்ட விளக்கத்தை கொண்ட உபநிடதங்களை கையாண்டு இவர்கள் மத மாற்றத்திற்க்கு உபயோகப்படுத்துகின்றனர். கூடவே இந்து மதம் இஸ்லாத்தை சொல்வது போல் பிரமையவும் ஏற்படுத்துகின்றனர். மேற்கொண்டு இரு உபநிடதங்களின் சாரம் என்ன என பார்த்த பின்பு ஒவ்வொரு வசனங்களாக செல்வோம்.

சாந்தோக்கிய உபநிடதம்:

ஆறாம் அத்தியாயம்: -  
உபதேசம்: உத்தாலகர் (தந்தை) -  சுவேதகேது (மகன்) விற்க்கு உபதேசிப்பது

தந்தையான உத்தாலகர் தன் மகன் சுவேதகேது குருகுலவாசம் முடிந்து வந்தபின்பு அவனுக்கு அறியப்படாமல் இருக்கும் அறியாததை அறிய செய்ய சொல்லப்படும் உபதேசம் இந்த் 6வது அத்தியாயம்.

இதன் முதல் காண்டத்தில் 3 உவமைகளுடன் இறைவன் பிரபஞ்சம் முழுவதும் வியாதிருப்பதை சொல்கிறார். அதாவது
"ஒரு மண்கட்டியினால் மண்ணாலானவை அனைத்தும் அறியப் படுகின்றன. மாறுதல்கள் அனைத்தும் சொற்கள் தெறிக்கும் வெறும் பெயர்களே. மண் மட்டுமே சத்தியம்."


இதன் இரண்டாவது காண்டத்தில் இந்த பிரபஞ்சம் எப்படி உருவானது? முதலில் இருந்தது சத் அல்லது அசத் எனப்படுபவையா? இல்லை இரண்டுமா? போன்ற கேள்விகளுக்கு உபதேசம் தரப்படுகிறது. பிறகு, அது 'சத்' முதலி இரண்டற்று இருந்தது என கூறி, அது எப்படி பலவாறாக மாறியது என்பது வரை சொல்லப்படுகிறது. இப்படி பலவாக மாறிய 'சத்' - அக்னி, நீர்,அன்னம் என மூன்றாக உருவாகியது என கூறுவது குறிப்பிடத்தக்கது. வேதமுமே - 3 வேதங்கள் மட்டுமே முன்னர் இருந்தன என அக்காலத்தில் கூறியதை நினைவில்கொள்க.

இதன் மூன்றாவது காண்டம் முதல் மேற்கூறிய மூன்றான அக்னி,நீர்,அன்னம் எப்படி  பிறப்பு, தோற்றங்கள் உருவாக காரணமாகி இருந்தன, மனிதனை எவ்வாறு படைத்தது என்பது வரை கூறப்பட்டு இம்மூன்றும் உருவாக்கிய அனைத்திலும் "சத்" (அ) "ஆத்மா" எப்படி உறைந்து இருக்கின்றது என்பது வரை சொல்லப்படுகிறது. இதில் 8 வது காண்டத்தில் "தத்வமஸி" - "நீயே அது" எனப்படும் மகாவாக்கியம் வெளிப்படுகிறது.

ஸ்வேதாச்வதர உபநிடதம்:

மொத்தம் 6 அத்தியாயங்களில் 4 -6 மட்டுமே அதிகமாக வசனங்களை எடுத்து கையாடுகின்றனர். 
இதில் நான்காவது அத்தியாயம், ஈசன் பிரம்மமே என்பதையும், ஆத்மா இரண்டாக ஜிவாத்மா,பரமாத்மா என இருப்பதையும், ஜிவாத்மா மாயையினால் கட்டுண்டு இருப்பதையும், அதை விடுத்து எப்படி முக்தி அடையவைப்பது என்பதையும், இதன் காரணம் அனைத்தும் ஈசனின் திருவிளையாடலே மாயை என்பதை பற்றியும் விவரிக்கிறது. முடிவாக பிறப்பு-இறப்பு கால சூழலிருந்து விடுபட தட்சினாமூர்த்தியாக வந்து காத்த அருளுமாறு சொல்கிறது.

ஆறாவது அத்தியாயம், இவ்வுலகம் பிரபஞ்சம் ஓட்டத்தின் காரணம் ஆதி இயற்க்கை எனவும், காலம் எனவும் சில படித்த மேதாவிகளால் தவறாக சொல்லப்படுகிறது ஆனால் அது அனைத்து பிரம்மம் எனவும், பிரம்மம் இப்பிரபஞ்சத்தில் சிலந்தியின் வலை போல் மாயையையால் சூழப்பட்டிருப்பதையும் அதில் பிரம்மம் வியாபித்துள்ளான எனவும் பிரம்மம் இன்றி மோட்சம் கிடையாது எனவும், ஞானிகள் தனக்குள் ஊடுருவி இருக்கும் பிரம்மத்தை அறிந்து செயல்படுவர்கள் எனவும், பிறப்பு இறப்பை விடுபடவேண்டுவர்கள் பிரம்மத்தை அறிந்து யோகத்துடன் ஒருங்கினைவர் என முடிவுறுகிறது.

திரிபு 1:

Chandogya Upanishad Chapter 6 Section 2 verse 1
It is mentioned in the Chandogya Upanishad: 
“Ekam Evadvitiyam”
“He is one only without a second.”
(Chandogya Upanishad 6:2:1)

சந்தோக்ய உபநிஷத்தில், 6:2:1 {பிரபாதக அத்தியாயத்தில் (Chapter-6) இரண்டாவது காண்டத்தில் (Section-2) வசனம் ஒன்று (Verse No.1)} இவ்வாறு கூறுகிறது.
”ஏகம் எவதித்யம்”
”இரண்டல்லாத அவன் ஒருவனே – ஒருவன் மட்டுமே”

பதில் 1:
மேற்கூறிய 6:2:1 என்பது பிரபஞ்சம் உருவாகும் முன்பு இரண்டு இருந்ததா? இல்லை "சத" மட்டும் இருந்ததா எனப்படும் கேள்விக்கான பதிலாகும். ஆனால் சாகீர் நாயக் (zakir naik) போன்ற இஸ்லாமியர்கள் தங்கள் கருத்தை முன்னிறுத்த இந்த வாக்கியத்தை உபயோகப்படுத்துகின்றனர். உண்மையில் இவர்கள் குர் ஆனில் அல்லா அனைத்தும் படைத்தான் என்பதை தவிர ஏன், எப்படி, எதற்க்கு என்பதை சொல்ல எவருக்கும் தைரியமில்லை. அது இஸ்லாம் பொறுத்தவரை "தெரியாது","அறியமுடியாது" என இஸ்லாமிய பரப்புரைகளில் முற்றுப்புள்ளி வைக்கப்படுகிறது. இந்த 6வது அத்தியாயம் இரண்டாவது காண்டத்தின் முடிவில் இஸ்லாம் கொள்கை சற்றும் சம்பந்தேமில்லாத உபநிடதம் என்பது அதனை படிப்பவர்களுக்கு தெரியும். இந்துக்கள் எதையும் படிக்காத காரணத்தினால் இப்படிப்பட்ட வசனங்களை வைத்து ஊரை ஏமாற்றுகின்றனர்.


திரிபு 2:
“There is no likeness of Him.”
[Svetasvatara Upanishad 4:19]

(The Principal Upanishad by S. Radhakrishnan pg. 737)

ஸ்வேதாஸ்வதார உபநிஷம் (4:19)
நதஸ்ய பரதிமா அஸ்தி
அவனுக்கு ஒப்பாக யாருமில்லை.
னநனம் உர்தவம் நதிரியாங்கம் நமத்யே நபரிஜ்யகரபாத்
நதஸ்ய ப்ரதிமா அஸ்தி யஸ்ய நாம மஹத் யஸாஹ்

அவனுக்கு ஒப்பாக யாருமில்லை அவன் புகழும் கீர்த்தியும் மிகப்பெரிது.//

ஸ்வேதாஸ்வதார உபநிஷம் (4:20)
ந சம்த்ர்ஸே திஸ்கதி ரூபம் அஸ்யா ந சக்சுஸா பஸ்யத்தி கஸ் கனய்னம்
அவனின் தோற்றத்தை நம்மால் காணவியலாது. அவனை எவரும் கண்ணால் கண்டதில்லை.
ஹிர்த ஹிர்திஸ்தம் மானஸ ஏனம் ஏவம் விதுர் அமர்தஸ் தெ பவன்ந்தி

அவனை இதயத்தால் உள்ளத்தால் நெருங்குவோர், அவனை அறிவர்.

பதில் 2:
nainam ūrdhvaṃ na tiryañcaṃ na madhye parijagrabhat /
na tasya pratimā asti yasya nāma mahad yaśaḥ // 4.19 //

No one can catch hold of Him either from above, or across, or in the middle. There is no likeness of Him. His name is Great Glory (Mahad Yasah).


na saṃdṛśe tiṣṭhati rūpam asya na cakṣuṣā paśyati kaścanainaṃ /
hṛdā hṛdisthaṃ manasā ya enam evaṃ vidur amṛtās te bhavanti // 4.20 //


His form is not an object of vision; no one beholds Him with the eyes. They who, through pure intellect and the Knowledge of Unity based upon reflection, realize Him as abiding in the heart become immortal.

இதற்கான அர்த்தம் நம் புராணத்தில் சிவன் அடியையும், முடியையும் தேடி செல்லும் பிரம்ம,விஷ்ணு மூலம் ஒப்பிட்டு அறிந்துக்கொள்ளலாம். இறைவனுக்கு உருமில்லை என்பதை நாம் முன்பே "சந்தேகத்தை தெளிதல் - பகவத்கீதை"  கீதை,சைவ சித்தாந்த நூல்களிலும் இதே கருத்தை சொல்லப்பட்டதை பார்த்தோம்.  4.19 உபநிடத கருத்தும் அதனையே விளக்குகிறது. ஆனால் திரிபு ஏற்படுத்துபவர்கள் இதே அத்தியாயத்தில் -4.16, 4.17 சொல்லப்ப்ட்டதை வசதியாக விட்டுவிடுவர். 4.16 ல், எல்லா உயிரிடத்திலும் மறைமுகமாக இருப்பதையும், 4.17ல், தியானத்தின் மூலம் மனதினால் உணர்ந்துகொள்ளலாம் என்பதை பற்றியும் விவரிக்கிறது. அதையும் தாண்டி 4.20ல் புலன்களினால் கட்டுண்ட கண்ணகளினால் பார்க்காமல் ஞானத்தின் கண் நாம் பிரம்மம் எவ்வாறு எல்லா உயிரிடத்து பிரதபலிக்கிறான் என தெரிந்துகொள்ள முடியும் என சொல்கிறது. ஆனால், சாகீர் நாயக் போன்றவர்கள் அதனை ஏற்க தயாராக இல்லை அதனால் தங்களுக்கு சாதகமாக ஒன்றை மட்டும் எடுத்து அதுவும் அந்த வசனத்தில் வரும் ஒரு வார்த்தை மட்டும் கையாள்வது எந்த வகையான சத்தியத்தை பின் தொடர்கின்றனர் என்பதும் புரியவில்லை.

திரிபு: 3
It is mentioned in the Shwetashvatara Upanishad
“Nacasya kascij janita na cadhipah”
“Of Him there are neither parents nor Lord.”

(Shwetashvatara Upanishad 6:9)

(The Principal Upanishad by S. Radhakrishnan pg. 745)

(and in Sacred books of the East volume 15, the Upanishads Part II Page 263)

ஸ்வேதாஸ்வதார உபநிஷம் (6:9)
”நகஸ்ய கஸ்ஜிஜ் ஜானித நகதிப்பா” அவனுக்கு பெற்றோர்கள் இல்லை. அவனுக்கு அதிபதி யாருமில்லை.
”நதஸ்ய கஸ்ஜித் பாதிர் அஸ்திலோகே ந செஸித நைவ க தஸ்ய லிங்கம் நகரணம் கரணதி பதியே”

அவனுக்கு உலகில் எந்த அதிபதியும் இல்லை அவனை ஆள்பவர் எவருமில்லை. அவனுக்கு எந்த வரையறையுமில்லை. அவனே காரணி. அதிபதி, அவனுக்கு இணையான எவரும் இல்லை.

பதில்: 3

na tasya kaścit patir asti loke na ceśitā naiva ca tasya liṅgaṃ /
sa kāraṇaṃ karaṇādhipādhipo na cāsya kaścij janitā na cādhipaḥ // 6.9 //


He has no master in the world, no ruler, nor is there even a sign of Him by which He can be inferred. He is the cause, the Lord of the lord of the organs; and He is without progenitor or controller.

ஏற்கனவே கூறியது போல் தேவையானதை எடுத்து திரிபு ஏற்படுத்துவதில் அவர்களுக்கு நிகர் அவர்களே. இறை க்கு உருமில்லை என்ற போது அவனுக்கு அடையாளம் இதுதான் என நம்மால் சொல்ல முடியாது, எல்லா அடையாளமும் அவனே என்ற நிலைக்கே நாம் வர இயலும். இதுவே இந்து மதம் கூறுவது இந்த உபநிடததிலும் சொல்லப்படுவது. இதை கருத்தை கொண்டுவரும் முன்பு, 6:2 லில் இப்பிரபஞ்சத்தில் எல்லாவற்றிலும் வியாபத்துள்ளது என்பதையும், பிரம்மம் ஐம்பூதங்களுக்கும் ஊடுருவி இருப்பதையும், 6:7ல் பிரம்மம் எல்லாவற்றின் காரணியாகவும், 6:8ல் பிரம்மத்திற்க்கு  கை,கால் போன்ற உருவமைப்பு என்பதெல்லாம் கிடையாது என்பதை திட்டவட்டமாக சொல்லப்படுகிறது. இதை ஏற்றுக்கொள்ள முடியாத சாகீர் நாயக் அடிமைகளும் திரிபு செய்து தங்கள் சத்தியத்தை மீறி பின்பற்றுகின்றனர்.







Friday, 21 October 2016

சந்தேகத்தை தெளிதல் - பகவத் கீதை

இந்து மதம் என்பது "வேதம், உபநிடதம், பிரம்ம சுத்திரம். ஆறு தரிசனங்கள். ஆறு சமயங்கள், ஆகமம், பற்பல சித்தாந்த,வேதாந்த நூல்கள், பகவத்கீதை கொண்ட ஒரு கூட்டு கலவையாகும்." இது போலவே.. 

"பல கடவுள் என வழிப்ப்ட்டாலும் அவை அனைத்து ஒர் இறைவனை குறித்து வழிபடும் 

பல வழிகளே. உதாரணமாக சிவன், விஷ்ணு என்றால் இரு கடவுளாக தெரியும். ஆனால் அக்கடவுள் வந்த சமயம் ஒர் சமயத்தில் இருந்து அல்ல.. இரண்டு சமயங்களில் இருந்து வந்தவையாகும். அவ்விரு சமயங்களிலும் இறைவன் என்பது சிவன் ஒருவனே என சைவத்திலும், விஷ்ணு ஒருவனே என வைணவத்திலும் கூறப்பட்டிருக்கும்." 


இது அந்த ஆறு சமயங்களில் வரும் கடவுள்களுக்கு மட்டுமே பொருந்தும். மற்ற ஏனைய
கடவுள்கள் அனைத்தும் இயற்கை தேவதைகளாகவும், செயல்பாட்டின் தேவதைகளாகவுமே வழங்கப்பட்டுள்ளன. அதில் உதாரணமாக நாம் சொல்வது,

சந்திரன் - கிரக அதிபதி,வருணன் -  மழை அதிபதி, இராகு - கிரக அதிபதி, சனி - கிரக 
அதிபதி, பூமாதேவி -  பூமி அதிபதி, போன்றவையாகும். இருப்பினும் இதுவும் அவரவர் 
தேவைக்கேற்ப இறைவன் கொடுப்பது என்பதே புலப்படும் அதற்க்கு பகவத்கீதை யை 
பார்த்தால் புரியும்.  


காமைஸ்தைஸ்தைர்ஹ்ருதஜ்ஞாநா: ப்ரபத்யந்தே அந்யதேவதா:।
தம் தம் நியமமாஸ்தாய ப்ரக்ருத்யா நியதா: ஸ்வயா॥ 7.20 ॥

இயற்கையான மனபோக்கினால் தூண்டப்பட்டு, வெவ்வேறு ஆசைகளால் மதிமயங்கியவர்கள் அந்தந்த ஆசைகளுக்கு ஏற்ப பல தேவதைகளை வழிபடுகின்றனர். 

யோ யோ யாம் யாம் தநும் பக்த: ஷ்ரத்தயார்சிதுமிச்சதி।
தஸ்ய தஸ்யாசலாம் ஷ்ரத்தாம் தாமேவ விததாம்யஹம்॥ 7.21 ॥

எந்தெந்த பக்தன் எந்தெந்த தேவதையை நம்பிக்கையுடன் வழிபட விரும்புகிறானோ, அவர்களின் அந்த நம்பிக்கையை நான் உறுதி உடையதாக செய்கிறேன்.



ஸ தயா ஷ்ரத்தயா யுக்தஸ்தஸ்யாராதநமீஹதே।
லபதே ச தத: காமாந்மயைவ: விஹிதாந்ஹிதாந்॥ 7.22 ॥

அந்த பக்தன் நம்பிக்கையுடன் அந்த தேவதையை வழிபடுகிறேன். அந்த தேவதையின் மூலம் தன் ஆசைகள் நிறைவேற பெறுகிறான். எனினும் அந்த ஆசைகளை நிறைவேற்றுபவன் நானே.


இப்படி அனைத்தும் நானே என கூறும் நம் இறைவன் இருக்க இதனை இன்றைய மதவியாபாரிகள் தங்கள் சுயநலத்திற்காக  வசனங்களை கட் காப்பி செய்து பாமர மக்களையும், இந்து மதம் பற்றி அறியா படித்த மக்களையும் முட்டாளாக்கி மத மாற்றம் செய்கின்றனர். இவர்கள் கூறும் அனைத்து திரிபு வசனங்களுக்கும் முந்தைய வசனங்கள் மூலமாக அவர்களின் கொள்கை முற்றிலும் வேறு அதோடு அவர்களை தாண்டிய பயணத்தில் நாம் இறைவனை நோக்கி இருக்கின்றோம் என நிலைப்படுத்தவே இந்த சந்தேகத்தை தெளிதல் ஆகும். இனி ஒவ்வொரு வசனங்களாக பார்ப்போம்.
=========================================================================================


பகவத்கீதை விளக்கங்கள்: 

திரிபு 1: 


இந்த அகிலத்தின் தந்தையும்தாயும்காப்பவரும்முன்னோனும் நானேஅறியப்பட வேண்டிய பொருளும் தூய்மைப்படுத்தும் பொருளும் ஓம் எனும் மந்திரமும் நானே என கடவுள் தன்னைப் பற்றிக் கூறுகின்றார். (பகவத் கீதை 9 : 17)

பதில் 1:

இதில் 2-3 ஸ்லோகங்களை சேர்ந்த திரிபு செய்யப்பட்ட கருத்து.. திரிபு எனில் இஸ்லாத்திற்க்கு ஏற்றவாறு திரிபு செய்யபட்டது...உண்மையில் ஸ்லோகப்படி அனைத்தும் நானே என்பதே கருத்து அதை கீழே நீங்கள் அவதானிக்கலாம். இது இஸ்லாத்தின் படி ஷிர்க் ஆகும். நெய், அக்னி, வேள்வி,தந்தை ,தாய் எல்லாம் நானே என கிருஷ்ணன் சொல்வது அவர்களுக்கு அது இணைவைப்பாகும். அப்படியிருக்க இவர்கள் இதை வைத்து ஊரை ஏமாற்றுகின்றனர்.


அஹம் க்ரதுரஹம் யஜ்ஞ: ஸ்வதாஹமஹமௌஷதம்।
மந்த்ரோ அஹமஹமேவாஜ்யமஹமக்நிரஹம் ஹுதம்॥ 9.16 ॥

நானே கிரது, நானே வேள்வி, நானே ஷ்வதா, நானே ஔஷதம், நானே மந்திரம், நானே நெய், நானே அக்னி, வேள்வி செய்தலாகிய கர்மமும் நானே.




பிதாஹமஸ்ய ஜக³தோ மாதா தா⁴தா பிதாமஹ: | 
வேத்³யம் பவித்ரமோங்கார ருக்ஸாம யஜுரேவ ச ॥ 9.17 ॥
இந்த உலகின் தந்தையாக, தாயாக, பாட்டனாக, வினைபயனை அளிப்பவனாக, அறியத்தக்கவனாக, புனிதபடுத்துபவனாக, பிரணவ வடிவினனாக, ரிக், சாம, யஜுர், வேதங்களாக நானே இருக்கிறேன்.



கதிர்பர்தா ப்ரபு: ஸாக்ஷீ நிவாஸ: ஷரணம் ஸுஹ்ருத்।
ப்ரபவ: ப்ரலய: ஸ்தாநம் நிதாநம் பீஜமவ்யயம்॥ 9.18 ॥


புகலிடம், வளர்ப்பவன், தலைவன், சாட்சி, இருப்பிடம், தஞ்சம், நண்பன், பிறப்பிடம், ஒதுங்குமிடம், தங்குமிடம், செல்வம், அழிவற்ற விதை, அனைத்தும் நானே.


=========================================================================================
திரிபு 2:
'எல்லா உலகங்களின் இறைவனாகவும்ஆரம்பம் அற்றவனாகவும்பிறப்பற்றவனாகவும் உள்ள கடவுளாகிய என்னை யாரொருவர் அறிகின்றாரோமனிதர்களிடையே தெளிவுற்றவனான அவர் எல்லா பாவங்களிலிருந்தும் விடுதலை பெறுகின்றார். (பகவத் கீதை 10:3) 

பதில் 2:
யோ மாமஜமநாதிம் ச வேத்தி லோகமஹேஷ்வரம்।
அஸம்மூட: ஸ மர்த்யேஷு ஸர்வபாபை: ப்ரமுச்யதே॥ 10.3 ॥

நான் பிறப்பற்றவன், ஆரம்பமற்றவன், உலகின் தலைவன் என்று யார் அறிகிறானோ அவன் மனமயக்கம் இல்லாதவன் . அவன் எல்லா பாவங்களிலிருந்தும் விடுபடுகிறான்

இந்த ஸ்லோகத்தின் படியே நாம் ஒம்காரம், பிரம்மம், சிவம் என பல்வேறாக சொல்வதின்அர்த்தம் இதுதான். அவதாரம், உருவம் என்பது பக்தன் தன்னுடைய உருவமில்லாத இறைவனுக்கு அவன் கொடுத்த ஞானத்தின் படி உருவகமாக போற்றுவதே ஆகும்.

=========================================================================================
திரிபு 3:

இன்னும் கடவுள் மரணமற்றவன்அழிவற்றவன்நிலையானவன் 
(
பகவத் கீதை 14 : 27) என கடவுள் தன்னைப்பற்றி கூறுகின்றான்.


பதில் 3:
அதாவது 14வது அத்தியாயம் என்பது "குணத்ரயவிபாக யோகம்" என்பதாகும். இதில் கிருஷ்ணன் கூறுவது சத்வ,ரஜஸ்,தமோ என முக்குணங்களை விட்டு ஒருவன் எப்படி விலகி சித்தியடைவது என்பதை பற்றியது ஆகும். 


மாம் ச யோ அவ்யபிசாரேண பக்தியோகேந ஸேவதே।
ஸ குணாந்ஸமதீத்யைதாந்ப்ரஹ்மபூயாய கல்பதே॥ 14.26 ॥


            மாறாத பக்தி யோகத்தால் யார் என்னை வழிபடுகிறானோ, அவன் இந்த குணங்களை                     முற்றிலும் கடந்து, இறைநிலையை அடைவதற்கு தகுதி பெறுகிறான்


ப்ரஹ்மணோ ஹி ப்ரதிஷ்டாஹமம்ருதஸ்யாவ்யயஸ்ய ச।
ஷாஷ்வதஸ்ய ச தர்மஸ்ய ஸுகஸ்யைகாந்திகஸ்ய ச॥ 14.27 ॥

                        ஏனெனில் பிரம்மத்திற்கும், அழிவற்ற மோட்ச நிலைக்கும், நிலையான                                               தர்மத்திற்கும், ஒப்பற்ற சுகத்திற்கும் இருப்பிடம் நானே.   


அதாவது இறைநிலை அடைந்து விடுவதே இந்த அத்தியாயத்தி நோக்கம். அப்படி இருக்கும் இருப்பிடமும் நானே என்பதே அதன் விளக்கம். ஆனால் இவர்கள் திரிபுக்கும், உண்மை விளக்கத்துக்கும் வித்தியாசத்தை நோக்குங்கள். இது மதமாற்றும் யுக்தி என்பதை தெரிந்துக்கொள்ளலாம்.      

=======================================================================================================
திரிபு 4:
நான் யோக மாயையினால் மூடப்பட்டு எல்லோருக்கும் விளங்குவதில்லைமதியிழந்த இவ்வுலகம்பிறப்பற்றவனும் மாறுபாடற்றவனுமாகிய என்னை அறிவதில்லை. (பகவத் கீதை 7:24, 25)


பதில் 4:
ஆப்ராஹிய மதங்கள் பொறுத்தவரை மாயை எனும் கருத்து கிடையாது. ஆனால் அதையே இவர்கள் ஆதாரமாக காட்டி அவரவர் மதத்தை இந்து மத நூல்களுடன் ஒப்பிட்டு நிறுவ பார்க்கின்றனர் என்பதற்க்கு இது ஒரு சான்று. 

ஏழாவது அத்தியாயம் "ஞானவிஞ்ஞான யோகத்தை" பற்றிய குறிப்பு ஆகும். இறைவனுக்கு உருமில்லை ஆனால் எவ்வுருவமும் எடுக்க வல்லது என்பது நம் இந்து மதத்தின் கூற்று. இறைவனுக்கு உருவமுண்டு அதை பார்க்க முடியாது என்பது ஆப்ராமிய மதத்தின் கூற்று. இதை வைத்து இவர்கள் செய்யும் திரிபுகளே இது. முழுமுதற் பிரம்மம் ,சிவம் என்பது உருமில்லாத,ஆதி அந்தமில்லாத , பரப்பொருள், பரமாத்மா என வருணிக்கப்பட்டு அது எதுவோ அதுவே "இறை". ஆனால் எத்தகைய உருவமும் எடுக்க வல்லது என்பதினாலேயே அவ்வுருவம் எடுக்கும் தன்மைக்கு அவதாரம் எனவும் வழங்கபடலாயிற்று. 
இது பகவத்கீதையில் பின்வருமாறு கூறுப்படுகிறது.


நாஹம் ப்ரகாஷ: ஸர்வஸ்ய யோகமாயாஸமாவ்ருத:।
மூடோ அயம் நாபிஜாநாதி லோகோ மாமஜமவ்யயம்॥ 7.25 ॥

யோக மாயையால் நன்றாக மறைக்கப்பட்டுள்ள நான் எல்லோருக்கும் தெரிவதில்லை. நான் பிறப்பற்றவன், நான் அழிவற்றவன் என்பதை அறிவற்ற இந்த உலகம் தெரிந்துகொள்வதில்லை. 


இந்த ஸ்லோகம் கூறும் உலக மனிதர்கள் இறை இருப்பை நம்பாதவர்கள், பெளதிகர்களை சொல்வது, இயற்கையே இறை என நினைப்பவர்களுக்கூரியது.  இதை 7:24  ஸ்லோகத்தில் "புலன்களினால் தென்படும் இயல்பை கொண்டு இவர்கள் இதனை நிறுவுகின்றனர்" என்று சொல்வதில் புரிந்துக்கொள்ளலாம். இறைவனுக்கு உருமில்லை ஆனால் எவ்வுருவமும் எடுக்க வல்லது என்பதனை சைவ சித்தாந்தில் வரும் "திருவுந்தியார்" நூலின் முதல் பாடல் கூறுவது


அகளமாய் யாரும் அறிவரி தப்பொருள்

சகளமாய் வந்ததென் றுந்தீபற

தானாகத் தந்ததென் றுந்தீபற. 

அதாவது உருமில்லாத இறை தன் பெருங்கருணையினாலே தன் பக்தனின் பக்திக்கு இணங்க திருவுருவமேனி எடுத்து வருவதை குறிக்கும் பாடல் ஆகும். இதே ஒத்த கருத்துடையது மேற்கண்ட அத்தியாயமும் ஆகும்.  அதில் வரும் 7:18 வது ஸ்லோகம் அதனை தெளிவாக குறிப்படப்படுகிறது. அதாவது உண்மையை அறிந்தவனுக்கு ஞானியாகவும், குருவாகவும் வருபவர் நானே என்பதனையே இங்கும் குறிப்பிடப்படுகிறது.

உதாரா: ஸர்வ ஏவைதே ஜ்ஞாநீ த்வாத்மைவ மே மதம்।
ஆஸ்தித: ஸ ஹி யுக்தாத்மா மாமேவாநுத்தமாம் கதிம்॥ 7.18 ॥

இவர்கள் எல்லோரும் நல்லவர்களே . ஆனால் உண்மையை அறிந்தவனும் நானும் சமமே. இது எனது கருத்து. ஏனெனில் மனம் நிலைபெற்ற அவன் மிக மேலான கதியாகிய என்னையே சார்ந்து இருக்கிறான்.  



========================================================================
திரிபு 5:

'
கடவுள் புலன் உணர்விற்கும் மனித கற்பனைகளுக்கும் அப்பாற்பட்டவன்இன்னும் கடவுள் மாறுபாடற்றவன். (பகவத் கீதை 12 : 3, 4)

பதில் 5:
பகவத் கீதை 12வது அத்தியாயம் பக்தியோகத்தை பற்றிய குறிப்புடையது. 4வரிகளுக்கு மேல் உள்ள விளக்கத்தை வெறுமனே 2 வரிகளில் கொடுப்பதை நாமும் சற்று சிந்திக்க வேண்டும். உண்மையில் பக்தி யோக அத்தியாயம் வரக்காரணம் அர்ஜுனனின் கேள்வியான "யோகத்தை நன்றாக அறிந்தவர்கள் யார்" என்பதாகும்.  இனி வசனங்களை பார்ப்போம்.

மய்யாவேஷ்ய மநோ யே மாம் நித்யயுக்தா உபாஸதே।
ஷ்ரத்தயா பரயோபேதா: தே மே யுக்ததமா மதா:॥ 12.2 ॥

ஸ்ரீ பகவான் கூறினார்: மனத்தை என்னிடம் வைத்து, யோக பக்தியில் நிலைபெற்று, மேலான சிரத்தையுடன் யார் என்னை வழிபடுகிறார்களோ அவர்கள் மேலான யோகிகள் என்பது எனது கருத்து.



யே த்வக்ஷரமநிர்தேஷ்யம் அவ்யக்தம் பர்யுபாஸதே।
ஸர்வத்ரகமசிம்த்யம்ச கூடஸ்தம் அசலம்த்ருவம்॥ 12.3 ॥

ஸம்நியம்யேந்த்ரியக்ராமம் ஸர்வத்ர ஸமபுத்தயா:।
தே ப்ராப்நுவந்தி மாமேவ ஸர்வபூதஹிதே ரதா:॥ 12.4 ॥

புலன் கூட்டங்களை நன்றாக வசபடுத்தி, எல்லோரிடமும் சமநோக்குடன் எல்லா உயிர்களுக்கும் நன்மையை விரும்பி, சொல்லால் விளக்க முடியாததும் எங்கும் நிறைந்ததும், சிந்தனைக்கு எட்டாததும், மாறாததும், அசைவற்றதும், நிலைத்ததும், அழிவற்றதுமான பிரம்மத்தை வழிபடுபவர்களும் என்னையே அடைகிறார்கள். 


=======================================================================================================
'திரிபு 6:

பரமாத்மா பிரிந்திருப்பதாக தோன்றினாலும் என்றுமே பிரிவு பெறாமல் இருக்கின்றார்அவர் ஒருவராகவே நிலைத்திருக்கின்றார்அவரே ஒவ்வொரு உயிர்வாழியின் பாதுகாப்பாளரும் எல்லாவற்றையும் அழிப்பவரும் அபிவிருத்தி செய்பவருமாவார். (பகவத் கீதை 13:17)

பதில் 6:

மேற்கண்ட வசனத்தை போட்டு சில மதபிரிவினைவாத வாஹாபி இஸ்லாமியர்கள் இதைத்தான் இஸ்லாம் சொல்கிறது எனவும், நாம் ஏதோ அதை ஒற்றுக்கொள்ளாதது போலவும் பேசுவர். உண்மையில் அதன் வசனம் எண் 13:16 என்பது. உண்மையிலேயே இவர்கள் பகவத் கீதையை 13:16 ஏற்றுக்கொண்டால். இவர்கள் 13.15 வசனத்தை ஏற்றுக்கொள்வார்களா? என கேட்டால் உண்மை தெரிந்துவிடும்.13.15 சொல்வதின் படி அவர் அனைத்து பொருட்களிலும் இருக்கிறார் என்பதாகும். அதன் வசனம் 13:15 சொல்வது:
பஹிரந்தஷ்ச பூதாநாமசரம் சரமேவ ச।
ஸூக்ஷ்மத்வாத்ததவிஜ்ஞேயம் தூரஸ்தம் சாந்திகே ச தத்॥ 13.15 ॥

அவர் பொருட்களுக்கு வெளியிலும் உள்ளேயும் இருக்கிறார். அசையாததும் அசைவதுமாகிய பொருட்கள் எல்லாம் அவரே, நுண்மையாக இருப்பதால் அவர் அறியபட முடியாதவர். அவர் தூரத்தில் இருக்கிறார். அருகிலும் இருக்கிறார். 


அவிபக்தம் ச பூதேஷு விபக்தமிவ ச ஸ்திதம்।
பூதபர்த்ரு ச தஜ்ஜ்ஞேயம் க்ரஸிஷ்ணு ப்ரபவிஷ்ணு ச॥ 13.16 ॥


அறியப்பட வேண்டிய அந்த பரம்பொருள் பிரிவுபடாதவர். பொருட்களில் பிரிவுபட்டது போல் தோன்றுகிறார். பொருட்களை தோற்றுவிப்பதும், தாங்குவதும், தன்னுள்கொள்வதும் அவரே 

=======================================================================================================