இன்றைய தேதியில் கார்ப்பரேட் குருக்கள் செய்யும் சில தவறுகளினாலும், போலி சாமியார்களினாலும் ஒரு ஆன்மிக குரு வின் சிறப்பு தெரியாமால் இருக்கின்றனர். ஆன்மிக குரு உங்களை அடுத்த நிலைக்கு கொண்டு செல்பவர். சில வார்த்தைகளில் உங்கள் ஆன்மிக சிந்தனையில் பெரும் மாற்றத்தை உண்டு செய்பவர்கள். அப்படிப்பட்ட ஆன்மிக குரு இந்த காலத்தில் இருப்பார்களா? என சந்தேகிப்பவர்களுக்கு, குரு - கு என்றால் அஞ்ஞானம்(இருள்),ரு என்றால் நீக்குபவர் (ஒளியை உண்டாக்குபவர்).குரு என்ற சொல்லுக்கு அஞ்ஞான இருளை நீக்கி ஞான ஒளி உண்டாக்குபவர் என்று பொருள். அகத்தியர் "அடுக்கு நிலை போதம்" என்ற நூலில் யார் குருவாக இருக்க தகுதியுடையவர் என தெளிவு படுத்தியுள்ளார். மொத்தம் 10 பாடல்கள் கொண்டது. 10 பாடல்களுக்கும் விளக்கம் கொடுக்கூடிய ஒருவரே குருவாக இருந்து தன் சீடர்கள அடுத்த நிலைக்கு கொண்டு செல்ல கூடியவர் என கூறுகிறார். கிழே அந்த 10 ஒரு பாடல் மட்டும் கொடுக்கப்பட்டுள்ளது.
குருவின் சிறப்பு
------------------------
சொல்பிறந்த விடமெங்கே முப்பாழ் எங்கே
துவாரபாலகர் எங்கே முதற்பாழ் எங்கே
நல்லசங்கு நதிஎங்கே வைகுந்தம் எங்கே
நாரணனும் ஆலிலைமேல் படுத்த தெங்கே
அல்லப்படும் ஐம்புத மொடுக்கம் எங்கே
ஆறஞ்சுயிதழ் இரண்டு முளைத்த தெங்கே
சொல்லவல்லார் உண்டாணல் அவரை நாமும்
தொழுதுகுரு வெனப்பணிந்து வணங்களாமே (1)
இந்த ஒரு பாடலுக்கு ஒரே பொருளில் பதில் கூறக்கூடியவர் எவராயினும் அவரிடம் மீதம் இருக்கும் 10 பாடல்களுக்கும் விளக்கம் கேட்டுக்கொள்ளுங்கள், அந்த ஒருவரே நீங்கள் கால காலமாக தேடிய "ஆன்மிக குரு" என அறிந்துக்கொள்ளுங்கள்.
[மீத மிருக்கும் 9 பாடல்கள் "தேக சித்தியும்,யோக சித்தியும்" என புத்தகத்தில் இருக்கிறது. பதிப்பகம்: விஜயா]
No comments:
Post a Comment