Friday, 21 October 2016

சந்தேகத்தை தெளிதல் - பகவத் கீதை

இந்து மதம் என்பது "வேதம், உபநிடதம், பிரம்ம சுத்திரம். ஆறு தரிசனங்கள். ஆறு சமயங்கள், ஆகமம், பற்பல சித்தாந்த,வேதாந்த நூல்கள், பகவத்கீதை கொண்ட ஒரு கூட்டு கலவையாகும்." இது போலவே.. 

"பல கடவுள் என வழிப்ப்ட்டாலும் அவை அனைத்து ஒர் இறைவனை குறித்து வழிபடும் 

பல வழிகளே. உதாரணமாக சிவன், விஷ்ணு என்றால் இரு கடவுளாக தெரியும். ஆனால் அக்கடவுள் வந்த சமயம் ஒர் சமயத்தில் இருந்து அல்ல.. இரண்டு சமயங்களில் இருந்து வந்தவையாகும். அவ்விரு சமயங்களிலும் இறைவன் என்பது சிவன் ஒருவனே என சைவத்திலும், விஷ்ணு ஒருவனே என வைணவத்திலும் கூறப்பட்டிருக்கும்." 


இது அந்த ஆறு சமயங்களில் வரும் கடவுள்களுக்கு மட்டுமே பொருந்தும். மற்ற ஏனைய
கடவுள்கள் அனைத்தும் இயற்கை தேவதைகளாகவும், செயல்பாட்டின் தேவதைகளாகவுமே வழங்கப்பட்டுள்ளன. அதில் உதாரணமாக நாம் சொல்வது,

சந்திரன் - கிரக அதிபதி,வருணன் -  மழை அதிபதி, இராகு - கிரக அதிபதி, சனி - கிரக 
அதிபதி, பூமாதேவி -  பூமி அதிபதி, போன்றவையாகும். இருப்பினும் இதுவும் அவரவர் 
தேவைக்கேற்ப இறைவன் கொடுப்பது என்பதே புலப்படும் அதற்க்கு பகவத்கீதை யை 
பார்த்தால் புரியும்.  


காமைஸ்தைஸ்தைர்ஹ்ருதஜ்ஞாநா: ப்ரபத்யந்தே அந்யதேவதா:।
தம் தம் நியமமாஸ்தாய ப்ரக்ருத்யா நியதா: ஸ்வயா॥ 7.20 ॥

இயற்கையான மனபோக்கினால் தூண்டப்பட்டு, வெவ்வேறு ஆசைகளால் மதிமயங்கியவர்கள் அந்தந்த ஆசைகளுக்கு ஏற்ப பல தேவதைகளை வழிபடுகின்றனர். 

யோ யோ யாம் யாம் தநும் பக்த: ஷ்ரத்தயார்சிதுமிச்சதி।
தஸ்ய தஸ்யாசலாம் ஷ்ரத்தாம் தாமேவ விததாம்யஹம்॥ 7.21 ॥

எந்தெந்த பக்தன் எந்தெந்த தேவதையை நம்பிக்கையுடன் வழிபட விரும்புகிறானோ, அவர்களின் அந்த நம்பிக்கையை நான் உறுதி உடையதாக செய்கிறேன்.



ஸ தயா ஷ்ரத்தயா யுக்தஸ்தஸ்யாராதநமீஹதே।
லபதே ச தத: காமாந்மயைவ: விஹிதாந்ஹிதாந்॥ 7.22 ॥

அந்த பக்தன் நம்பிக்கையுடன் அந்த தேவதையை வழிபடுகிறேன். அந்த தேவதையின் மூலம் தன் ஆசைகள் நிறைவேற பெறுகிறான். எனினும் அந்த ஆசைகளை நிறைவேற்றுபவன் நானே.


இப்படி அனைத்தும் நானே என கூறும் நம் இறைவன் இருக்க இதனை இன்றைய மதவியாபாரிகள் தங்கள் சுயநலத்திற்காக  வசனங்களை கட் காப்பி செய்து பாமர மக்களையும், இந்து மதம் பற்றி அறியா படித்த மக்களையும் முட்டாளாக்கி மத மாற்றம் செய்கின்றனர். இவர்கள் கூறும் அனைத்து திரிபு வசனங்களுக்கும் முந்தைய வசனங்கள் மூலமாக அவர்களின் கொள்கை முற்றிலும் வேறு அதோடு அவர்களை தாண்டிய பயணத்தில் நாம் இறைவனை நோக்கி இருக்கின்றோம் என நிலைப்படுத்தவே இந்த சந்தேகத்தை தெளிதல் ஆகும். இனி ஒவ்வொரு வசனங்களாக பார்ப்போம்.
=========================================================================================


பகவத்கீதை விளக்கங்கள்: 

திரிபு 1: 


இந்த அகிலத்தின் தந்தையும்தாயும்காப்பவரும்முன்னோனும் நானேஅறியப்பட வேண்டிய பொருளும் தூய்மைப்படுத்தும் பொருளும் ஓம் எனும் மந்திரமும் நானே என கடவுள் தன்னைப் பற்றிக் கூறுகின்றார். (பகவத் கீதை 9 : 17)

பதில் 1:

இதில் 2-3 ஸ்லோகங்களை சேர்ந்த திரிபு செய்யப்பட்ட கருத்து.. திரிபு எனில் இஸ்லாத்திற்க்கு ஏற்றவாறு திரிபு செய்யபட்டது...உண்மையில் ஸ்லோகப்படி அனைத்தும் நானே என்பதே கருத்து அதை கீழே நீங்கள் அவதானிக்கலாம். இது இஸ்லாத்தின் படி ஷிர்க் ஆகும். நெய், அக்னி, வேள்வி,தந்தை ,தாய் எல்லாம் நானே என கிருஷ்ணன் சொல்வது அவர்களுக்கு அது இணைவைப்பாகும். அப்படியிருக்க இவர்கள் இதை வைத்து ஊரை ஏமாற்றுகின்றனர்.


அஹம் க்ரதுரஹம் யஜ்ஞ: ஸ்வதாஹமஹமௌஷதம்।
மந்த்ரோ அஹமஹமேவாஜ்யமஹமக்நிரஹம் ஹுதம்॥ 9.16 ॥

நானே கிரது, நானே வேள்வி, நானே ஷ்வதா, நானே ஔஷதம், நானே மந்திரம், நானே நெய், நானே அக்னி, வேள்வி செய்தலாகிய கர்மமும் நானே.




பிதாஹமஸ்ய ஜக³தோ மாதா தா⁴தா பிதாமஹ: | 
வேத்³யம் பவித்ரமோங்கார ருக்ஸாம யஜுரேவ ச ॥ 9.17 ॥
இந்த உலகின் தந்தையாக, தாயாக, பாட்டனாக, வினைபயனை அளிப்பவனாக, அறியத்தக்கவனாக, புனிதபடுத்துபவனாக, பிரணவ வடிவினனாக, ரிக், சாம, யஜுர், வேதங்களாக நானே இருக்கிறேன்.



கதிர்பர்தா ப்ரபு: ஸாக்ஷீ நிவாஸ: ஷரணம் ஸுஹ்ருத்।
ப்ரபவ: ப்ரலய: ஸ்தாநம் நிதாநம் பீஜமவ்யயம்॥ 9.18 ॥


புகலிடம், வளர்ப்பவன், தலைவன், சாட்சி, இருப்பிடம், தஞ்சம், நண்பன், பிறப்பிடம், ஒதுங்குமிடம், தங்குமிடம், செல்வம், அழிவற்ற விதை, அனைத்தும் நானே.


=========================================================================================
திரிபு 2:
'எல்லா உலகங்களின் இறைவனாகவும்ஆரம்பம் அற்றவனாகவும்பிறப்பற்றவனாகவும் உள்ள கடவுளாகிய என்னை யாரொருவர் அறிகின்றாரோமனிதர்களிடையே தெளிவுற்றவனான அவர் எல்லா பாவங்களிலிருந்தும் விடுதலை பெறுகின்றார். (பகவத் கீதை 10:3) 

பதில் 2:
யோ மாமஜமநாதிம் ச வேத்தி லோகமஹேஷ்வரம்।
அஸம்மூட: ஸ மர்த்யேஷு ஸர்வபாபை: ப்ரமுச்யதே॥ 10.3 ॥

நான் பிறப்பற்றவன், ஆரம்பமற்றவன், உலகின் தலைவன் என்று யார் அறிகிறானோ அவன் மனமயக்கம் இல்லாதவன் . அவன் எல்லா பாவங்களிலிருந்தும் விடுபடுகிறான்

இந்த ஸ்லோகத்தின் படியே நாம் ஒம்காரம், பிரம்மம், சிவம் என பல்வேறாக சொல்வதின்அர்த்தம் இதுதான். அவதாரம், உருவம் என்பது பக்தன் தன்னுடைய உருவமில்லாத இறைவனுக்கு அவன் கொடுத்த ஞானத்தின் படி உருவகமாக போற்றுவதே ஆகும்.

=========================================================================================
திரிபு 3:

இன்னும் கடவுள் மரணமற்றவன்அழிவற்றவன்நிலையானவன் 
(
பகவத் கீதை 14 : 27) என கடவுள் தன்னைப்பற்றி கூறுகின்றான்.


பதில் 3:
அதாவது 14வது அத்தியாயம் என்பது "குணத்ரயவிபாக யோகம்" என்பதாகும். இதில் கிருஷ்ணன் கூறுவது சத்வ,ரஜஸ்,தமோ என முக்குணங்களை விட்டு ஒருவன் எப்படி விலகி சித்தியடைவது என்பதை பற்றியது ஆகும். 


மாம் ச யோ அவ்யபிசாரேண பக்தியோகேந ஸேவதே।
ஸ குணாந்ஸமதீத்யைதாந்ப்ரஹ்மபூயாய கல்பதே॥ 14.26 ॥


            மாறாத பக்தி யோகத்தால் யார் என்னை வழிபடுகிறானோ, அவன் இந்த குணங்களை                     முற்றிலும் கடந்து, இறைநிலையை அடைவதற்கு தகுதி பெறுகிறான்


ப்ரஹ்மணோ ஹி ப்ரதிஷ்டாஹமம்ருதஸ்யாவ்யயஸ்ய ச।
ஷாஷ்வதஸ்ய ச தர்மஸ்ய ஸுகஸ்யைகாந்திகஸ்ய ச॥ 14.27 ॥

                        ஏனெனில் பிரம்மத்திற்கும், அழிவற்ற மோட்ச நிலைக்கும், நிலையான                                               தர்மத்திற்கும், ஒப்பற்ற சுகத்திற்கும் இருப்பிடம் நானே.   


அதாவது இறைநிலை அடைந்து விடுவதே இந்த அத்தியாயத்தி நோக்கம். அப்படி இருக்கும் இருப்பிடமும் நானே என்பதே அதன் விளக்கம். ஆனால் இவர்கள் திரிபுக்கும், உண்மை விளக்கத்துக்கும் வித்தியாசத்தை நோக்குங்கள். இது மதமாற்றும் யுக்தி என்பதை தெரிந்துக்கொள்ளலாம்.      

=======================================================================================================
திரிபு 4:
நான் யோக மாயையினால் மூடப்பட்டு எல்லோருக்கும் விளங்குவதில்லைமதியிழந்த இவ்வுலகம்பிறப்பற்றவனும் மாறுபாடற்றவனுமாகிய என்னை அறிவதில்லை. (பகவத் கீதை 7:24, 25)


பதில் 4:
ஆப்ராஹிய மதங்கள் பொறுத்தவரை மாயை எனும் கருத்து கிடையாது. ஆனால் அதையே இவர்கள் ஆதாரமாக காட்டி அவரவர் மதத்தை இந்து மத நூல்களுடன் ஒப்பிட்டு நிறுவ பார்க்கின்றனர் என்பதற்க்கு இது ஒரு சான்று. 

ஏழாவது அத்தியாயம் "ஞானவிஞ்ஞான யோகத்தை" பற்றிய குறிப்பு ஆகும். இறைவனுக்கு உருமில்லை ஆனால் எவ்வுருவமும் எடுக்க வல்லது என்பது நம் இந்து மதத்தின் கூற்று. இறைவனுக்கு உருவமுண்டு அதை பார்க்க முடியாது என்பது ஆப்ராமிய மதத்தின் கூற்று. இதை வைத்து இவர்கள் செய்யும் திரிபுகளே இது. முழுமுதற் பிரம்மம் ,சிவம் என்பது உருமில்லாத,ஆதி அந்தமில்லாத , பரப்பொருள், பரமாத்மா என வருணிக்கப்பட்டு அது எதுவோ அதுவே "இறை". ஆனால் எத்தகைய உருவமும் எடுக்க வல்லது என்பதினாலேயே அவ்வுருவம் எடுக்கும் தன்மைக்கு அவதாரம் எனவும் வழங்கபடலாயிற்று. 
இது பகவத்கீதையில் பின்வருமாறு கூறுப்படுகிறது.


நாஹம் ப்ரகாஷ: ஸர்வஸ்ய யோகமாயாஸமாவ்ருத:।
மூடோ அயம் நாபிஜாநாதி லோகோ மாமஜமவ்யயம்॥ 7.25 ॥

யோக மாயையால் நன்றாக மறைக்கப்பட்டுள்ள நான் எல்லோருக்கும் தெரிவதில்லை. நான் பிறப்பற்றவன், நான் அழிவற்றவன் என்பதை அறிவற்ற இந்த உலகம் தெரிந்துகொள்வதில்லை. 


இந்த ஸ்லோகம் கூறும் உலக மனிதர்கள் இறை இருப்பை நம்பாதவர்கள், பெளதிகர்களை சொல்வது, இயற்கையே இறை என நினைப்பவர்களுக்கூரியது.  இதை 7:24  ஸ்லோகத்தில் "புலன்களினால் தென்படும் இயல்பை கொண்டு இவர்கள் இதனை நிறுவுகின்றனர்" என்று சொல்வதில் புரிந்துக்கொள்ளலாம். இறைவனுக்கு உருமில்லை ஆனால் எவ்வுருவமும் எடுக்க வல்லது என்பதனை சைவ சித்தாந்தில் வரும் "திருவுந்தியார்" நூலின் முதல் பாடல் கூறுவது


அகளமாய் யாரும் அறிவரி தப்பொருள்

சகளமாய் வந்ததென் றுந்தீபற

தானாகத் தந்ததென் றுந்தீபற. 

அதாவது உருமில்லாத இறை தன் பெருங்கருணையினாலே தன் பக்தனின் பக்திக்கு இணங்க திருவுருவமேனி எடுத்து வருவதை குறிக்கும் பாடல் ஆகும். இதே ஒத்த கருத்துடையது மேற்கண்ட அத்தியாயமும் ஆகும்.  அதில் வரும் 7:18 வது ஸ்லோகம் அதனை தெளிவாக குறிப்படப்படுகிறது. அதாவது உண்மையை அறிந்தவனுக்கு ஞானியாகவும், குருவாகவும் வருபவர் நானே என்பதனையே இங்கும் குறிப்பிடப்படுகிறது.

உதாரா: ஸர்வ ஏவைதே ஜ்ஞாநீ த்வாத்மைவ மே மதம்।
ஆஸ்தித: ஸ ஹி யுக்தாத்மா மாமேவாநுத்தமாம் கதிம்॥ 7.18 ॥

இவர்கள் எல்லோரும் நல்லவர்களே . ஆனால் உண்மையை அறிந்தவனும் நானும் சமமே. இது எனது கருத்து. ஏனெனில் மனம் நிலைபெற்ற அவன் மிக மேலான கதியாகிய என்னையே சார்ந்து இருக்கிறான்.  



========================================================================
திரிபு 5:

'
கடவுள் புலன் உணர்விற்கும் மனித கற்பனைகளுக்கும் அப்பாற்பட்டவன்இன்னும் கடவுள் மாறுபாடற்றவன். (பகவத் கீதை 12 : 3, 4)

பதில் 5:
பகவத் கீதை 12வது அத்தியாயம் பக்தியோகத்தை பற்றிய குறிப்புடையது. 4வரிகளுக்கு மேல் உள்ள விளக்கத்தை வெறுமனே 2 வரிகளில் கொடுப்பதை நாமும் சற்று சிந்திக்க வேண்டும். உண்மையில் பக்தி யோக அத்தியாயம் வரக்காரணம் அர்ஜுனனின் கேள்வியான "யோகத்தை நன்றாக அறிந்தவர்கள் யார்" என்பதாகும்.  இனி வசனங்களை பார்ப்போம்.

மய்யாவேஷ்ய மநோ யே மாம் நித்யயுக்தா உபாஸதே।
ஷ்ரத்தயா பரயோபேதா: தே மே யுக்ததமா மதா:॥ 12.2 ॥

ஸ்ரீ பகவான் கூறினார்: மனத்தை என்னிடம் வைத்து, யோக பக்தியில் நிலைபெற்று, மேலான சிரத்தையுடன் யார் என்னை வழிபடுகிறார்களோ அவர்கள் மேலான யோகிகள் என்பது எனது கருத்து.



யே த்வக்ஷரமநிர்தேஷ்யம் அவ்யக்தம் பர்யுபாஸதே।
ஸர்வத்ரகமசிம்த்யம்ச கூடஸ்தம் அசலம்த்ருவம்॥ 12.3 ॥

ஸம்நியம்யேந்த்ரியக்ராமம் ஸர்வத்ர ஸமபுத்தயா:।
தே ப்ராப்நுவந்தி மாமேவ ஸர்வபூதஹிதே ரதா:॥ 12.4 ॥

புலன் கூட்டங்களை நன்றாக வசபடுத்தி, எல்லோரிடமும் சமநோக்குடன் எல்லா உயிர்களுக்கும் நன்மையை விரும்பி, சொல்லால் விளக்க முடியாததும் எங்கும் நிறைந்ததும், சிந்தனைக்கு எட்டாததும், மாறாததும், அசைவற்றதும், நிலைத்ததும், அழிவற்றதுமான பிரம்மத்தை வழிபடுபவர்களும் என்னையே அடைகிறார்கள். 


=======================================================================================================
'திரிபு 6:

பரமாத்மா பிரிந்திருப்பதாக தோன்றினாலும் என்றுமே பிரிவு பெறாமல் இருக்கின்றார்அவர் ஒருவராகவே நிலைத்திருக்கின்றார்அவரே ஒவ்வொரு உயிர்வாழியின் பாதுகாப்பாளரும் எல்லாவற்றையும் அழிப்பவரும் அபிவிருத்தி செய்பவருமாவார். (பகவத் கீதை 13:17)

பதில் 6:

மேற்கண்ட வசனத்தை போட்டு சில மதபிரிவினைவாத வாஹாபி இஸ்லாமியர்கள் இதைத்தான் இஸ்லாம் சொல்கிறது எனவும், நாம் ஏதோ அதை ஒற்றுக்கொள்ளாதது போலவும் பேசுவர். உண்மையில் அதன் வசனம் எண் 13:16 என்பது. உண்மையிலேயே இவர்கள் பகவத் கீதையை 13:16 ஏற்றுக்கொண்டால். இவர்கள் 13.15 வசனத்தை ஏற்றுக்கொள்வார்களா? என கேட்டால் உண்மை தெரிந்துவிடும்.13.15 சொல்வதின் படி அவர் அனைத்து பொருட்களிலும் இருக்கிறார் என்பதாகும். அதன் வசனம் 13:15 சொல்வது:
பஹிரந்தஷ்ச பூதாநாமசரம் சரமேவ ச।
ஸூக்ஷ்மத்வாத்ததவிஜ்ஞேயம் தூரஸ்தம் சாந்திகே ச தத்॥ 13.15 ॥

அவர் பொருட்களுக்கு வெளியிலும் உள்ளேயும் இருக்கிறார். அசையாததும் அசைவதுமாகிய பொருட்கள் எல்லாம் அவரே, நுண்மையாக இருப்பதால் அவர் அறியபட முடியாதவர். அவர் தூரத்தில் இருக்கிறார். அருகிலும் இருக்கிறார். 


அவிபக்தம் ச பூதேஷு விபக்தமிவ ச ஸ்திதம்।
பூதபர்த்ரு ச தஜ்ஜ்ஞேயம் க்ரஸிஷ்ணு ப்ரபவிஷ்ணு ச॥ 13.16 ॥


அறியப்பட வேண்டிய அந்த பரம்பொருள் பிரிவுபடாதவர். பொருட்களில் பிரிவுபட்டது போல் தோன்றுகிறார். பொருட்களை தோற்றுவிப்பதும், தாங்குவதும், தன்னுள்கொள்வதும் அவரே 

=======================================================================================================

No comments:

Post a Comment