Tuesday, 25 October 2016

சந்தேகத்தை தெளிதல் - உபநிடதம்

"சந்தேகத்தை தெளிதல்" என்னும் தலைப்பின்கீழ் அனைத்து (கீதை,உபநிடதம்,வேதம்) புரட்டுகளையும், திரிபுகளையும் கொண்டு வர நினைத்திருந்தேன். ஆனால் ஒவ்வொரு முறையும் பிற மதத்தவர்கள் வெவ்வேறு புதிய கீதை வசனங்கள், உபநிடத மற்றும் வேத வசனங்களை திருத்த ஆரம்பித்துவிட்டனர். ஒரு காலத்தில் கீதை வாக்கியங்களை திருத்திய இவர்கள் தற்போது வேத, உபநிடத வாக்கியங்களை திரிபு ஏற்படுத்த முயற்சி செய்கின்றனர். இதனாலேயே கீதை வசனங்கள் மட்டும்- "சந்தேகத்தை தெளிதல் - பகவத்கீதை" என்ற தலைப்பின் கீழ் கொண்டுவருவது என தீர்மானித்தேன். "சந்தேகத்தை தெளிதல் - உபநிடதம்" -  உபநிடத விளக்கங்கள் கொண்டு இருக்கும், "சந்தேகத்தை தெளிதல் - வேதம்" - வேத விளக்கங்கள் கொண்டிருக்கும். ஒவ்வொரு தலைப்பின் லிங்க் ஒவ்வொரு பக்கத்தின் இறுதியில் கொடுக்கப்பட்டிருக்கும். அதேபோல் நான் கேள்விபடும் புது திரிபு வசனங்களை விளக்கத்துடன் அவ்வப்போது அப்டேட் செய்யப்படும். நீங்கள் ஏதேனும் திரிபு வசனங்களை கண்டால் அதனை முழுதாக கமெண்ட் பகுதியில் இடுமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி, இனி..
.
உபநிடதம் என்றால் என்ன என்பதற்க்கு உபநிடதம் பற்றி திரு.ஜெயமோகன் அவர்களின் பார்வை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

"உபநிடதம் - நேர் பொருள் "அருகே அமர்தல்" -  அதாவது குருவின் அருகே இருந்து ஞானத்தை தெரிந்துக்கொள்ளுதல். இந்த நூல்கள் இரண்டு வகையாக உபதேசிக்கப்ப்ட்டிருக்கும். ஒன்று, உபநிடதம் ஒரு நாடகீயமான தருணத்தில் வெளிப்படுத்தப்பட்ட உபதேசமாக இருக்கும். அந்த நாடகீயத் தருணத்தின் புனைவுத்தன்மை அந்த உபதேசத்திலும் தொடரும். இரண்டு, அது ஒரு சீடனுக்கு குருவால் உபதேசிக்கப்பட்ட வடிவில் இருக்கும்."

"பகவத் கீதை" -  ஒரு இதிகாச நூலில் வரும் பாகமாக இருப்பினும் அது உபதேசமாக இருப்பதினால், குர் சிஷ்ய உறவு உண்டாவதினால் அதனை ஒரு உபநிடதமாகவே கருத வேண்டும். கீதை உபநிடதம் என்பது பல வேத, உபநிடத கருத்துக்களை உடைய சாறாக கருதப்படுவதின் காரணமும் அதுவே. இனி உபநிடத கருத்து திரிபுகளை பார்ப்போம்.

உபநிடத விளக்கங்கள் :

உபநிடதங்கள் பொறுத்தவரை மத மாற்ற பேர்வழிகள் அதிகமாக கையாள்வது 2 உபநிடதங்கள் அவை, சாந்தோக்கிய மற்றும் ஸ்வேதாச்வதர மும் ஆகும். இவர்கள் ஏன் இதனை மட்டும் கையாள்கின்றனர் என்ற கேள்வி ஒரு புறம் இருக்கட்டும். 200 மேற்பட்ட உபநிடதங்களில் 108 உபநிடதங்கள் முக்கியமானதாக கருதப்படுகிறது. அந்த 108 உபநிடதம் ஒவ்வொரு விளக்கங்கள் கொண்டவை. இவர்கள் அதில் ஒரு குறிப்பிட்ட விளக்கத்தை கொண்ட உபநிடதங்களை கையாண்டு இவர்கள் மத மாற்றத்திற்க்கு உபயோகப்படுத்துகின்றனர். கூடவே இந்து மதம் இஸ்லாத்தை சொல்வது போல் பிரமையவும் ஏற்படுத்துகின்றனர். மேற்கொண்டு இரு உபநிடதங்களின் சாரம் என்ன என பார்த்த பின்பு ஒவ்வொரு வசனங்களாக செல்வோம்.

சாந்தோக்கிய உபநிடதம்:

ஆறாம் அத்தியாயம்: -  
உபதேசம்: உத்தாலகர் (தந்தை) -  சுவேதகேது (மகன்) விற்க்கு உபதேசிப்பது

தந்தையான உத்தாலகர் தன் மகன் சுவேதகேது குருகுலவாசம் முடிந்து வந்தபின்பு அவனுக்கு அறியப்படாமல் இருக்கும் அறியாததை அறிய செய்ய சொல்லப்படும் உபதேசம் இந்த் 6வது அத்தியாயம்.

இதன் முதல் காண்டத்தில் 3 உவமைகளுடன் இறைவன் பிரபஞ்சம் முழுவதும் வியாதிருப்பதை சொல்கிறார். அதாவது
"ஒரு மண்கட்டியினால் மண்ணாலானவை அனைத்தும் அறியப் படுகின்றன. மாறுதல்கள் அனைத்தும் சொற்கள் தெறிக்கும் வெறும் பெயர்களே. மண் மட்டுமே சத்தியம்."


இதன் இரண்டாவது காண்டத்தில் இந்த பிரபஞ்சம் எப்படி உருவானது? முதலில் இருந்தது சத் அல்லது அசத் எனப்படுபவையா? இல்லை இரண்டுமா? போன்ற கேள்விகளுக்கு உபதேசம் தரப்படுகிறது. பிறகு, அது 'சத்' முதலி இரண்டற்று இருந்தது என கூறி, அது எப்படி பலவாறாக மாறியது என்பது வரை சொல்லப்படுகிறது. இப்படி பலவாக மாறிய 'சத்' - அக்னி, நீர்,அன்னம் என மூன்றாக உருவாகியது என கூறுவது குறிப்பிடத்தக்கது. வேதமுமே - 3 வேதங்கள் மட்டுமே முன்னர் இருந்தன என அக்காலத்தில் கூறியதை நினைவில்கொள்க.

இதன் மூன்றாவது காண்டம் முதல் மேற்கூறிய மூன்றான அக்னி,நீர்,அன்னம் எப்படி  பிறப்பு, தோற்றங்கள் உருவாக காரணமாகி இருந்தன, மனிதனை எவ்வாறு படைத்தது என்பது வரை கூறப்பட்டு இம்மூன்றும் உருவாக்கிய அனைத்திலும் "சத்" (அ) "ஆத்மா" எப்படி உறைந்து இருக்கின்றது என்பது வரை சொல்லப்படுகிறது. இதில் 8 வது காண்டத்தில் "தத்வமஸி" - "நீயே அது" எனப்படும் மகாவாக்கியம் வெளிப்படுகிறது.

ஸ்வேதாச்வதர உபநிடதம்:

மொத்தம் 6 அத்தியாயங்களில் 4 -6 மட்டுமே அதிகமாக வசனங்களை எடுத்து கையாடுகின்றனர். 
இதில் நான்காவது அத்தியாயம், ஈசன் பிரம்மமே என்பதையும், ஆத்மா இரண்டாக ஜிவாத்மா,பரமாத்மா என இருப்பதையும், ஜிவாத்மா மாயையினால் கட்டுண்டு இருப்பதையும், அதை விடுத்து எப்படி முக்தி அடையவைப்பது என்பதையும், இதன் காரணம் அனைத்தும் ஈசனின் திருவிளையாடலே மாயை என்பதை பற்றியும் விவரிக்கிறது. முடிவாக பிறப்பு-இறப்பு கால சூழலிருந்து விடுபட தட்சினாமூர்த்தியாக வந்து காத்த அருளுமாறு சொல்கிறது.

ஆறாவது அத்தியாயம், இவ்வுலகம் பிரபஞ்சம் ஓட்டத்தின் காரணம் ஆதி இயற்க்கை எனவும், காலம் எனவும் சில படித்த மேதாவிகளால் தவறாக சொல்லப்படுகிறது ஆனால் அது அனைத்து பிரம்மம் எனவும், பிரம்மம் இப்பிரபஞ்சத்தில் சிலந்தியின் வலை போல் மாயையையால் சூழப்பட்டிருப்பதையும் அதில் பிரம்மம் வியாபித்துள்ளான எனவும் பிரம்மம் இன்றி மோட்சம் கிடையாது எனவும், ஞானிகள் தனக்குள் ஊடுருவி இருக்கும் பிரம்மத்தை அறிந்து செயல்படுவர்கள் எனவும், பிறப்பு இறப்பை விடுபடவேண்டுவர்கள் பிரம்மத்தை அறிந்து யோகத்துடன் ஒருங்கினைவர் என முடிவுறுகிறது.

திரிபு 1:

Chandogya Upanishad Chapter 6 Section 2 verse 1
It is mentioned in the Chandogya Upanishad: 
“Ekam Evadvitiyam”
“He is one only without a second.”
(Chandogya Upanishad 6:2:1)

சந்தோக்ய உபநிஷத்தில், 6:2:1 {பிரபாதக அத்தியாயத்தில் (Chapter-6) இரண்டாவது காண்டத்தில் (Section-2) வசனம் ஒன்று (Verse No.1)} இவ்வாறு கூறுகிறது.
”ஏகம் எவதித்யம்”
”இரண்டல்லாத அவன் ஒருவனே – ஒருவன் மட்டுமே”

பதில் 1:
மேற்கூறிய 6:2:1 என்பது பிரபஞ்சம் உருவாகும் முன்பு இரண்டு இருந்ததா? இல்லை "சத" மட்டும் இருந்ததா எனப்படும் கேள்விக்கான பதிலாகும். ஆனால் சாகீர் நாயக் (zakir naik) போன்ற இஸ்லாமியர்கள் தங்கள் கருத்தை முன்னிறுத்த இந்த வாக்கியத்தை உபயோகப்படுத்துகின்றனர். உண்மையில் இவர்கள் குர் ஆனில் அல்லா அனைத்தும் படைத்தான் என்பதை தவிர ஏன், எப்படி, எதற்க்கு என்பதை சொல்ல எவருக்கும் தைரியமில்லை. அது இஸ்லாம் பொறுத்தவரை "தெரியாது","அறியமுடியாது" என இஸ்லாமிய பரப்புரைகளில் முற்றுப்புள்ளி வைக்கப்படுகிறது. இந்த 6வது அத்தியாயம் இரண்டாவது காண்டத்தின் முடிவில் இஸ்லாம் கொள்கை சற்றும் சம்பந்தேமில்லாத உபநிடதம் என்பது அதனை படிப்பவர்களுக்கு தெரியும். இந்துக்கள் எதையும் படிக்காத காரணத்தினால் இப்படிப்பட்ட வசனங்களை வைத்து ஊரை ஏமாற்றுகின்றனர்.


திரிபு 2:
“There is no likeness of Him.”
[Svetasvatara Upanishad 4:19]

(The Principal Upanishad by S. Radhakrishnan pg. 737)

ஸ்வேதாஸ்வதார உபநிஷம் (4:19)
நதஸ்ய பரதிமா அஸ்தி
அவனுக்கு ஒப்பாக யாருமில்லை.
னநனம் உர்தவம் நதிரியாங்கம் நமத்யே நபரிஜ்யகரபாத்
நதஸ்ய ப்ரதிமா அஸ்தி யஸ்ய நாம மஹத் யஸாஹ்

அவனுக்கு ஒப்பாக யாருமில்லை அவன் புகழும் கீர்த்தியும் மிகப்பெரிது.//

ஸ்வேதாஸ்வதார உபநிஷம் (4:20)
ந சம்த்ர்ஸே திஸ்கதி ரூபம் அஸ்யா ந சக்சுஸா பஸ்யத்தி கஸ் கனய்னம்
அவனின் தோற்றத்தை நம்மால் காணவியலாது. அவனை எவரும் கண்ணால் கண்டதில்லை.
ஹிர்த ஹிர்திஸ்தம் மானஸ ஏனம் ஏவம் விதுர் அமர்தஸ் தெ பவன்ந்தி

அவனை இதயத்தால் உள்ளத்தால் நெருங்குவோர், அவனை அறிவர்.

பதில் 2:
nainam ūrdhvaṃ na tiryañcaṃ na madhye parijagrabhat /
na tasya pratimā asti yasya nāma mahad yaśaḥ // 4.19 //

No one can catch hold of Him either from above, or across, or in the middle. There is no likeness of Him. His name is Great Glory (Mahad Yasah).


na saṃdṛśe tiṣṭhati rūpam asya na cakṣuṣā paśyati kaścanainaṃ /
hṛdā hṛdisthaṃ manasā ya enam evaṃ vidur amṛtās te bhavanti // 4.20 //


His form is not an object of vision; no one beholds Him with the eyes. They who, through pure intellect and the Knowledge of Unity based upon reflection, realize Him as abiding in the heart become immortal.

இதற்கான அர்த்தம் நம் புராணத்தில் சிவன் அடியையும், முடியையும் தேடி செல்லும் பிரம்ம,விஷ்ணு மூலம் ஒப்பிட்டு அறிந்துக்கொள்ளலாம். இறைவனுக்கு உருமில்லை என்பதை நாம் முன்பே "சந்தேகத்தை தெளிதல் - பகவத்கீதை"  கீதை,சைவ சித்தாந்த நூல்களிலும் இதே கருத்தை சொல்லப்பட்டதை பார்த்தோம்.  4.19 உபநிடத கருத்தும் அதனையே விளக்குகிறது. ஆனால் திரிபு ஏற்படுத்துபவர்கள் இதே அத்தியாயத்தில் -4.16, 4.17 சொல்லப்ப்ட்டதை வசதியாக விட்டுவிடுவர். 4.16 ல், எல்லா உயிரிடத்திலும் மறைமுகமாக இருப்பதையும், 4.17ல், தியானத்தின் மூலம் மனதினால் உணர்ந்துகொள்ளலாம் என்பதை பற்றியும் விவரிக்கிறது. அதையும் தாண்டி 4.20ல் புலன்களினால் கட்டுண்ட கண்ணகளினால் பார்க்காமல் ஞானத்தின் கண் நாம் பிரம்மம் எவ்வாறு எல்லா உயிரிடத்து பிரதபலிக்கிறான் என தெரிந்துகொள்ள முடியும் என சொல்கிறது. ஆனால், சாகீர் நாயக் போன்றவர்கள் அதனை ஏற்க தயாராக இல்லை அதனால் தங்களுக்கு சாதகமாக ஒன்றை மட்டும் எடுத்து அதுவும் அந்த வசனத்தில் வரும் ஒரு வார்த்தை மட்டும் கையாள்வது எந்த வகையான சத்தியத்தை பின் தொடர்கின்றனர் என்பதும் புரியவில்லை.

திரிபு: 3
It is mentioned in the Shwetashvatara Upanishad
“Nacasya kascij janita na cadhipah”
“Of Him there are neither parents nor Lord.”

(Shwetashvatara Upanishad 6:9)

(The Principal Upanishad by S. Radhakrishnan pg. 745)

(and in Sacred books of the East volume 15, the Upanishads Part II Page 263)

ஸ்வேதாஸ்வதார உபநிஷம் (6:9)
”நகஸ்ய கஸ்ஜிஜ் ஜானித நகதிப்பா” அவனுக்கு பெற்றோர்கள் இல்லை. அவனுக்கு அதிபதி யாருமில்லை.
”நதஸ்ய கஸ்ஜித் பாதிர் அஸ்திலோகே ந செஸித நைவ க தஸ்ய லிங்கம் நகரணம் கரணதி பதியே”

அவனுக்கு உலகில் எந்த அதிபதியும் இல்லை அவனை ஆள்பவர் எவருமில்லை. அவனுக்கு எந்த வரையறையுமில்லை. அவனே காரணி. அதிபதி, அவனுக்கு இணையான எவரும் இல்லை.

பதில்: 3

na tasya kaścit patir asti loke na ceśitā naiva ca tasya liṅgaṃ /
sa kāraṇaṃ karaṇādhipādhipo na cāsya kaścij janitā na cādhipaḥ // 6.9 //


He has no master in the world, no ruler, nor is there even a sign of Him by which He can be inferred. He is the cause, the Lord of the lord of the organs; and He is without progenitor or controller.

ஏற்கனவே கூறியது போல் தேவையானதை எடுத்து திரிபு ஏற்படுத்துவதில் அவர்களுக்கு நிகர் அவர்களே. இறை க்கு உருமில்லை என்ற போது அவனுக்கு அடையாளம் இதுதான் என நம்மால் சொல்ல முடியாது, எல்லா அடையாளமும் அவனே என்ற நிலைக்கே நாம் வர இயலும். இதுவே இந்து மதம் கூறுவது இந்த உபநிடததிலும் சொல்லப்படுவது. இதை கருத்தை கொண்டுவரும் முன்பு, 6:2 லில் இப்பிரபஞ்சத்தில் எல்லாவற்றிலும் வியாபத்துள்ளது என்பதையும், பிரம்மம் ஐம்பூதங்களுக்கும் ஊடுருவி இருப்பதையும், 6:7ல் பிரம்மம் எல்லாவற்றின் காரணியாகவும், 6:8ல் பிரம்மத்திற்க்கு  கை,கால் போன்ற உருவமைப்பு என்பதெல்லாம் கிடையாது என்பதை திட்டவட்டமாக சொல்லப்படுகிறது. இதை ஏற்றுக்கொள்ள முடியாத சாகீர் நாயக் அடிமைகளும் திரிபு செய்து தங்கள் சத்தியத்தை மீறி பின்பற்றுகின்றனர்.







No comments:

Post a Comment