ஸோம: ப்ரதமோ விவிதே
கந்தர்வோ விவித உத்தர:
த்ருத்யோ அகநிஷடே பதி
துரீயஸ்தே மனுஷ்யஜா!
திருமணத்தின்போது, மாங்கல்யம் சூட்டும் நேரத்தில் "மாங்கல்யம் தந்துனானே' என்று ஒரு சுலோகத்தைச் சொல்வதைக் கேட்கிறோம். இதன் தொடர்ச்சியாக,
""ஸோம: ப்ரதமோ விவிதே
கந்தர்வோ விவித உத்தர:
த்ருத்யோ அகநிஷடே பதி
துரீயஸ்தே மனுஷ்யஜா!""
இதற்கான பொருளை தவறாக விளக்குகிறார்கள். (மொழியியல் அறிவு பிரச்சனை)..
அந்தப் பொருளின் படி, நீ(மணமகள்) முதலில் சோமனுக்கு (சந்திரன்) உரியவளாக இருந்தாய், பின்பு கந்தர்வன் உன்னை அடைந்தான், பின்பு அக்கினி உன்னை அடைந்தான். இப்பொழுது நான்காவதாக ஒரு மானிடனை அடைகிறாய். என்று கூறுவார்கள்.
ஆனால், நம் சடங்குகளும் பழக்க வழக்கங்களும் மறைபொருளில் சொல்லப்பட்ட காரணத்தால்தானே மறையெனும் மந்திரத்தில் இருக்கின்றன. இதன் உள்ளர்த்தம் பொதிந்த பொருள் காட்டுவது...
கண்களுக்கு சூரியன், கைகளுக்கு இந்திரன் என்பது போன்று, நம் உடலின் ஒவ்வொரு பாகத்துக்கும் ஒரு தெய்வத் தன்மையை உருவகித்திருக்கின்றனர் முன்னோர். இதே போல... குழந்தை பிறந்ததில் இருந்து, வளர்ந்து பெரியவனாகும் அல்லது பெரியவளாகும் வரை ஒவ்வொரு பருவத்திலும் மனித உடல் பல மாற்றங்களை அடைகிறது. அவ்வாறு ஒவ்வொரு பருவத்தையும் ஒரு தெய்வத்துக்கு, தெய்வத் தன்மைக்கு ஒப்புமைப்படுத்துவது முன்னோர் மரபு.
பெண் குழந்தை பிறந்ததில் இருந்து, ஆடை அணியும் வயது வரையான பருவம்வரை ஸோமன் எனப்படும் சந்திரனின் ஆதிக்கத்தில் இருக்கிறாள். அப்பருவத்தில் குழந்தை நிலவைப் போல் குளிர்ச்சியாக இருக்கிறாள். பின்னர் பூப்பு எய்தும் பருவம் வரை விளையாட்டுத் தனமும் அழகும் நிரம்பிய (வனப்பு) பெண் குழந்தையாக வளர்கிறாள். இந்தப் பருவத்தில் கந்தர்வனின் ஆதிக்கத்தில் இருக்கிறாள். அதாவது விளையாட்டுத்தனமும் அழகும் நிரம்பிய பருவம். பின்னர் அக்னியின் ஆதிக்கத்தில், அதாவது மண வாழ்க்கைக்குத் தயாராகும் உணர்வுகளுடன் இருக்கிறாள். அப்படிப்பட்ட பெண், குடும்ப வாழ்க்கைக்குத் தயாராகி, திருமணம் செய்விக்கப்பட்டு ஓர் ஆண்மகனின் கரங்களில் ஒப்படைக்கப் படுகிறாள்.
"மூன்று பருவம் கடந்து உன்னை வந்தடையும் பெண்ணை ஏற்று தர்மத்தின் வழியில் அன்புகலந்த இல்வாழ்க்கையை நீ நடத்துவாய்'' என்று ஆண்மகனுக்கு ஆசிகளை வழங்கச் சொல்கிறது இந்த சுலோகம்.
ஆதலால் செய்யுள்களை மொழிபெயர்க்கும்போது... செய்யுள் சொல்லும் கருத்தை மட்டுமே நான் கொள்ளவேண்டும்....
செய்யுள்களில் சொல், அசை, சீர், அடியென இலக்கண அமைப்பு வரம்பு விதி உண்டு.... அதற்கு உட்பட்டுதான் செய்யுள்கள் அமையும்....
திருக்குறளுக்கே தமிழர் மூன்றுபேர் விளக்கவுரை எழுதியிருக்கிறார்கள்தானே.....
மிகத்துல்லியமாக மொழிபெயர்ப்பதாக சிலர் வாதிடக்கூடும்... அவர்களுக்கான பிரத்யேக செய்யுள்....
மாநிலஞ் சேவடி யாகத் தூநீர்
வளைநரல் பௌவம் உடுக்கை ஆகத்
விசும்புமெய் யாக திசைகை யாகப்
பசுங்கதிர் மதியமொடு சுடர்கண் ணாக
வியன்ற வெல்லாம் பயின்றகத் தடக்கிய
வேத முதல்வன் என்ப
தீதற விளங்கிய திகிரி யோனே
என்றார் பரம்பொருளைப் பாடிய பெருந்தேவனார் "நற்றிணையில்".
நாத்திகர் வேதத்தை ஆதாரமாகக் கொள்ளாவிடினும் சங்க இலக்கியத்தை மறுக்கமாட்டார்கள் என்பதால் இதை குறித்திடுவோம்.
ஆகாயம், காற்று, தீ, நீர், நிலமாகிய ஐம்பூதங்களும் பரம்பொருளின் அங்கம்.
மனிதன் உள்ளிட்ட அனைத்து ஜீவராசிகளும் ஐம்பூதங்களின் கலவை. அக்னி எனும் தீயைப்போலவே, மத்யமாகிய ஸோமனும், கந்தர்வனும் பரம்பொருளின் அங்கமே, கந்தர்வ, ஸோமர்களின் கூறுகள் சேர்வதாலேயே இளமங்கை சோபிக்கிறாள் என்ற கருத்தையே அந்த வேத வாக்கியம் புலப்படுத்துகிறதே அன்றி ஸோம, கந்தர்வ, அக்நியாதிகள் விவாஹம் செய்து, பின் விவாஹரத்து செய்து கொண்ட பெண் என்பதல்ல பொருள்.
ஸோம: ப்ரதமோ விவிதே
கந்தர்வோ விவித உத்தர:
த்ருத்யோ அகநிஷடே பதி
துரீயஸ்தே மனுஷ்யஜா!
என்ற வேதமந்திரம்
இனிய மயக்குறும் நீரால் இவள் வளர்க்கப்பட்டாள்.
இசையிறைந்த கனவுகளுக்கு நீர் இவளைக் கையளித்தது.
பின்னர் ஒளிவிடும் தூய நெருப்பால் இவள் நிறைந்தாள்.
நீரும் இசையும் நெருப்பும் இவளை விட்டு விலகட்டும்.
அம்மூன்றும் ஆனவனால் இவள் நிறைவடைவாளாக!
என்று மொழிமாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. சோமன் மயக்கமளிக்கும் நீர். அதன்பின் இசைத்தெய்வமான (வனப்பை கொடுப்பவன்) கந்தர்வன். அதன்பின்னர் அகநெருப்பாகிய அக்கினி. கடைசியாக கணவன். கன்னித்தன்மையை இதைவிடக் கவித்துவகாமச் சொல்ல முடியுமா என்ன?
இனி விவாக முறைகள் பற்றி பார்ப்போம்.....
எட்டு வித விவாஹங்கள்
மநுஸ்மிருதி உட்பட்ட தர்ம சாஸ்திரங்களில் எட்டு விதமான விவாஹங்கள் சொல்லியிருக்கிறது.
ப்ரஹ்மோ-தைவ-ஸ்ததைவார்ஷ:
ப்ரஜாபத்ய-ஸ்ததாஸுர:|
காந்தர்வோ ராக்ஷஸச்சைவ
பைசாசாஷ்டம: ஸ்ம்ருத: - (மநுஸ்மிருதி III.21)
அதாவது பிராம்மம், தைவம், ஆர்ஷம், பிரஜாபத்தியம், ஆஸுரம், காந்தர்வம், ராக்ஷஸம், பைசாசம் என்று மணத்தில் மொத்தம் எட்டு தினுசு.
{{[விளக்கமாக பதிய இன்னும் பத்து பதிவுகள் தேவை என்பதால்... சுருக்கமாக இப்போது பார்த்துவிடுவோம்....]}}
'பிராம்மம்' --- பெண்வீட்டாரிடம் கன்யாதானம் பெற்று மணமுடிப்பது....
மாதா-பிதாக்கள் ஒரு நல்ல குலத்துப் பெண்ணின் மாதா பிதாக்களிடம் வந்து கன்யாதானம் பண்ணித் தரச்சொல்லிக் கேட்டுக்கொள்வது.
பிள்ளைக்குப் பெண் வீட்டார் வரதக்ஷிணை தருவது, பெண்ணுக்குப் பிள்ளை வீட்டார் பரிசம் தருவது என்று இரண்டும் இதில் இல்லை.
வியாபாரக் கொடுக்கல் வாங்கலாக இல்லாமல் இரண்டு குலங்கள் அபிவிருத்தியாக வேண்டும் என்ற உயர்ந்த லக்ஷ்யம் ஒன்றிலேயே பண்ணப்படுவது பிராம்ம விவாஹம்.
தர்ம சாஸ்திரங்கள் எட்டு வித விவாஹங்களில் இதைத்தான் மிகவும் சிரேஷ்டமாகச் சொல்லியிருக்கின்றன.
(கோவில்களில் முடிக்கப்படும் மணங்கள் இவ்வகையினதே)
'தைவம்' -- பெண் வீட்டார் மாப்பிள்ளை தேடி மணமுடிப்பது...
'ஆர்ஷம்' -- கல்வியில் மேம்பட்டோருக்கு மணமுடிப்பது.. (இதுவும் மாப்பிள்ளை தேடி அலையும் கதைதான். மாப்பிளை வரதட்சனை கொடுப்பது.)
'பிரஜாபத்தியம்' -- பெண் ருதுவாகும் முன்பே அவசர அவசரமாக மாப்பிள்ளைதேடி, ருதுவானதும் மணமுடிப்பது..... (கிட்டத்தட்ட இது தைவம் போல வரதட்சணை இல்லாமல் இருக்கும்.)
'ஆஸுரம்' -- பொண்ணுக்கு பொருத்தமற்றவனை மணமுடிப்பது.. (நேரடியாக இல்லாவிட்டாலும் இதில் மாப்பிள்ளை தரப்பிலிருந்து அனேக வரதட்சனை பெண்ணின் குடும்பத்துக்கோ, சொந்தங்களுக்கோ கொடுக்கப்படலாம்.)
'காந்தர்வம்' -- இதுக்கு வெகுவான விளக்கமே தேவையில்லை. காலம்காலமாக ஓஹோவென கொண்டாடப்படும் மணமுறை இது....
அதான்பா.... (காதல் கல்யாணம்) லவ் மேரேஜ்...
'ராக்ஷஸம்' -- போட்டி அல்லது சண்டையில் பெண் அல்லது பெண்ணின் தரப்பினரை வெற்றி கொண்டு மணமுடிப்பது...
'பைசாசம்' -- இதுவும் நமக்கு நம்மூர் சினிமாக்கள் மூலம் பழக்கமானதுதான்... (வில்லன் பொண்ணுக்கும், பொண்ணோட குடும்பத்துக்கும் பிடிக்கலைன்னாலும்.... வலுக்கட்டாயமாக தாலி கட்டுறது....
1 யஜ்ஞஸ்ய ரித்விஜே தைவ: (யாஜ்ஞவல்கிய ஸ்மிருதி I.59)
2 ஆகாயார்ஷஸ்து கோத்வயம் (யாஜ்ஞவல்கிய ஸ்மிருதி I.59)
3 ஆஸுரோ த்ரவிணாதானாத் (யாஜ்ஞவல்கிய ஸ்மிருதி I.61)
4 உதீர்ஷ்வாத : பதிவதீ ஹ்யேஷா விச்வாவஸூம் நமஸா கீர்பிரீடே|
அந்யாம் இச்ச பித்ருஷதாம் வ்யக்தாம் ஸ தே பாகோ ஜநுஷா தஸ்ய வித்தி||
உதீர்ஷ்வாதோ விச்வாவஸோ நமஸேடாமஹே த்வா|
அந்யாம் இச்ச ப்ரபர்வ்யம் ஸம்ஜாயாம் பத்யா ஸ்ருஜ|
-(ரிக் X.85.21-22)
"மாநிலஞ் சேவடி யாகத் தூநீர்
வளைநரல் பௌவம் உடுக்கை ஆகத்
விசும்புமெய் யாக திசைகை யாகப்
பசுங்கதிர் மதியமொடு சுடர்கண் ணாக
வியன்ற வெல்லாம் பயின்றகத் தடக்கிய
வேத முதல்வன் என்ப
தீதற விளங்கிய திகிரி யோனே"
[[நேரிசை ஆசிரியப்பா]]
திணை : பாடாண்
துறை : கடவுள் வாழ்த்து
பாடியவர் : பெருந்தேவனார்
பொருள்:
மாநிலம் சேவடி ஆக - பரந்த நிலமானது சிவந்த பாதங்களாகவும்
தூநீர் வளைநரல் பௌவம் உடுக்கை ஆக - சங்குகள் ஒலிக்கும் தூய நீரையுடைய கடலானது ஆடையாகவும்
விசும்பு மெய் ஆக - பரந்த வானமானது உடலாகவும்
திசை கை ஆக - திசைகளானவை கைகளாகவும்
பசுங்கதிர் மதியமொடு சுடர்கண் ஆக - குளிர்ந்த கதிர்களை வீசும் நிலவும், வெப்பக் கதிர்களை வீசும் சூரியனும் இரு கணகளாகவும்
இயன்ற எல்லாம் பயின்று அகத்து அடக்கிய - பொருள்களாகவும், உயிர்களாகவும் அமைந்த எல்லாவற்றையும் அதன்பண்புகளையும் தெரிந்து தனக்குள் அடக்கிக்கொண்டுள்ள
வேத முதல்வன் என்ப - மறைகளால் முதல்வன் எனக்கருதப்படுபவன்
தீது அற விளங்கிய திகிரியோனே - தீமைகள் நீங்கிய சக்கராயுதத்தை உடையவனாகிய திருமால் ஆவான்.
இலக்கணக் குறிப்பு:
சேவடி, பசுங்கதிர், தூநீர் - பண்புத்தொகை
இந்த மந்திரத்தின் உண்மை அர்த்தம் என்ன ?
ReplyDeleteஸோம: ப்ரதமோ விவிதே கந்தர்வோ விவித உத்தர: த்ருத்யோ அகநிஷடே பதி: துரீயஸ்தே மனுஷ்யஜா:
பொருள் : ஸோமன் முதலில் இந்த மணப்பெண்ணை அடைந்தான். பிறகு கந்தர்வன் இவளை அடைந்தான். உன்னுடைய மூன்றாவது கணவன் அக்நி. உன்னுடைய நான்காவது கணவன் தான் இந்த மனித ஜாதியில் பிறந்தவன்.
விளக்கம்: திருமணமாகப் போகும் மணப்பெண் முதலாவதாக ஸோமன் என்பவனுக்கு மனைவியாக இருந்தாள். இரண்டாவதாகக் கந்தர்வன் என்பவனுக்கு மனைவியாக இருந்தாள். மூன்றாவதாக அக்நிக்கு மனைவியாக இருந்திருக்கிறாள். நான்காவதாகத் தான் இப்பொழுது கல்யாணம் செய்து கொள்ளும் மாப்பிள்ளைக்கு மனைவியாகிறாள். அதாவது இதற்கு முன் மூன்று கடவுள்கள் இந்தப் பெண்ணை அனுபவித்து விட்டு விட்ட பின்பு தான் இப்பொழுது நான்காவதாக இந்த மணமகன் இவளை மனைவியாக ஏற்றுக் கொள்கிறான் என்பது விளக்கமாகும்.
இந்தப் பொருளைத் தரும் மேற்கண்ட மந்திரத்தைத் தான் புரோகிதப் பார்ப்பான் கலியாணத்தை நடத்தி வைக்கும் பொழுது சொல்கிறான்.
மந்திரம்: உதீர்ஷ்வாதோ விஷ்வாவஸோ நம ஸேடா மஸேத்வா அந்யா மிச்ச ப்ரபர்வ்யகும் ஸஞ்ஜாயாம் பத்யா ஸ்குஜ!
பொருள்: விசுவாசு என்னும் கந்தர்வனே இந்தப் படுக்கையிலிருந்து எழுந்திருப்பாயாக. உன்னை வணங்கி வேண்டுகிறோம். முதல் வயதிலுள்ள வேறு கன்னிகையை நீ விரும்புவாயாக. என் மனைவியைத் தன் கணவனுடன் சேர்த்து வைப்பாயாக.
மந்திரம்: உதீர்ஷ்வாத பதிவதீ ஹ்யேஷா விஷ்வா வஸீந் நமஸ கீர்ப்பிரீடடே அந்யா மிச்ச பித்ரு பதம வ்யக் தாகும் ஸதே பாகோ ஜநுஷா தஸ்ய வித்தி
பொருள்: இந்தப் படுக்கையிலிருந்து எழுந்திருப்பாயாக. இந்தப் பெண்ணுக்குக் கணவன் இருக்கிறான் அல்லவா? விசுவாவசுவான உன்னை வணங்கிக் கேட்டுக் கொள்கிறோம். தகப்பன் வீட்டிலிருப்பவளும், இதுவரை திருமணம் ஆகாதவளுமான வேறு கன்னிகையை நீ விரும்புவாயாக. அந்த உன்னுடைய பங்கு பிறவியினால் ஆகிவிட்டது என்பதை நீ அறிவாயாக.
விளக்கம்: கலியாணம் நடந்து நான்கு நாள்கள் தம்பதிகள் ஒரே படுக்கையில் படுக்க வேண்டும். ஆனால் அந்த சமயத்தில் அவர்கள் உடலுறவு கொள்ளக் கூடாது. நான்கு நாள் கழிந்த பிறகு மேற்கண்ட மந்திரங்களைச் சொல்ல வேண்டும். அதாவது கலியாணமான அந்த மணப் பெண்ணானவள் கந்தர்வன் என்னும் கடவுளோடு ஒரே படுக்கையில் படுத்திருக்கிறாளாம். அந்தப் பெண்ணைக் கலியாணம் செய்து கொண்ட இந்த மணமகன் தன் மனைவியுடன் படுத்து சுகம் அனுபவித்துக் கொண்டிருக்கும் கந்தர்வன் என்னும் கடவுளிடத்தில் தன் மனைவியைத் தன்னிடம் ஒப்படைக்க வேண்டுமாய்க் கெஞ்சுகிறான் என்பதாகும்.
ஆதாரம்: விவாஹ மந்த்ராத்த போதினி.ஆக்கியோர்: கீழாத்தூர் ஸ்ரீநிவாஸாச்சாரியார் பி.ஓ.எல்., (பக்கங்கள்:முறையே: 22-59)
இது சரியானதா ? விளக்குங்களேன்
முழுக்க முழுக்க தப்பு உளறல் இந்த மிகத் தவறான வாதங்களை எல்லாம் நம்பாதீர்கள் ஜாக்கிரதை ஜாக்கிரதை.
Delete